Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 26, 2016

உரிப்பவர்களை மட்டுமல்ல, விளைவிப்பவர்களையும் அழவைக்கிறது வெங்காயம்: ஓர் அதிர்ச்சி கணக்கு


வெங்காயத்தின் விலை அதிகமாக  உயரும் போதெல்லாம், விலையை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும். அதாவது ஏற்றுமதி செய்யும் வெங்காயத்தின் அளவை குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும். ஆனால் இப்போது வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த சமயத்தில் அதுகுறித்து யாரும் கவலைப்படுவதே இல்லை. காரணம் பாதிக்கப்படுபவர் விவசாயி தானே  என்ற மெத்தனம்.

இந்த நிலையில் ஒரு டன் வெங்காயம் விற்பனை செய்தால் ஒரு ரூபாய்தான் கிடைக்கிறது என அதிர்ச்சி தருகிறார் புனே சந்தையில் வணிக தொடர்பு கொண்ட விவசாயி தேவிதாஸ். “விவசாயத்தின் வீழ்ச்சியால் தினமும் ஏதாவது ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்துகொண்டேதான் இருக்கிறது. இதற்கு வழக்கமான கடன் மட்டும் காரணம் இல்லை. வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்திருப்பதும்தான் "என்கிறார் தேவிதாஸ்.

இரண்டு ஏக்கரில் வெங்காயத்தை பயிரிட ரூ.80 ஆயிரம் செலவாகிறது. இதில் விளையும் 952 கிலோ வெங்காயத்தை புனேவில் விவசாயிகள் உற்பத்தி சந்தையில் 10 கிலோ வெங்காயம் ரூ.16 க்கு வாங்கிக் கொள்ளப்படுகிறது. ஆக ஒரு கிலோ வெங்காயம் ரூ.1.60 ஆகும்.  ஆக மொத்தம் 952 கிலோ வெங்காயத்தை ரூ.1523.20க்கு விற்பனை செய்கிறோம்.




விற்பனை செய்த தொகையில் ஏஜென்ட் கமிஷன் 91.35, தொழிலாளர்களுக்கான கூலி ரூ. 77.55 மற்றும் இதர செலவுகள் ரூ.33.30 ஆகும். இதை தவிர்த்து வெங்காயத்தை சந்தைக்கு ஏற்றிச் செல்லும் வண்டிக்கு வாடகையாக ரூ.1320 ஆகும்.

ஆக விற்பனை செய்த ரூ.1523.20 லிருந்து செலவுகள்  (ரூ.1320+91.35+77.55+33.30)  மொத்தம் ரூ. 1522.20 போக மீதம் 1 ரூபாய்தான் மிஞ்சுகிறது.

தொடர்ந்து சோகத்துடன் பேசும் தேவிதாஸ்,“இத்தனை பெரிய பாடுபட்டு உழைத்ததற்கு கிலோவுக்கு 3 ரூபாய் கிடைக்குமென எதிர்பார்த்தேன். ஆனால் கிலோவுக்கு ஒரு ரூபாய் கிடைப்பது பெருத்த ஏமாற்றத்தை தருகிறது. மேலும் வெங்காயத்தை பயிர் செய்து அறுவடை செய்ய குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் ஆகும். அந்த உழைப்புக்கான செலவுகளைக் கூட என்னால் முழுமையாக எடுக்க முடியவில்லை. ஆனால் விலை வீழ்ச்சிக்குக் காரணமாக வெங்காயத்தின் அளவு குறைந்ததும், மோசமான தரமும் என்றுதான் பலரும் கூறுகிறார்கள்.

வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்ததாகவும், விவசாயி நட்டத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் ஒரு கிலோ வெங்காயம் ரூ.20 கீழே குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.