Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 25, 2016

கம்பு தயிர்சாதம் செய்வது எப்படி


தேவையான பொருட்கள் :

கம்பு - 1/4 கோப்பை
சின்ன வெங்காயம் - 5 அல்லது (பெரிய வெங்காயம் - சிறிது 1 )
ப.மிளகாய் - 1
தயிர் - தே.அ
உப்பு - தே. அ

தாளிக்க வேண்டியவை :

எண்ணெய் - 1/2 தே.க
கடுகு - 1/4 தே.க
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காய துள் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கம்பை கழுவி விட்டு 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். (நேரம் கூட ஊறினால் பரவாயில்லை). தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக உடைத்துக் கொள்ளவும்.

* அரைத்த கம்புடன் 1 1/2  டம்ளர் தண்ணீர் சேர்த்து + ப.மிளகாய் + வெங்காயம் சேர்த்து மைக்ரோவேயில் 6 நிமிடங்கள் வைக்கவும். நடுநடுவே கிளறிவிடவும்.

* வாணலியில் கொதிக்கவிட 10 நிமிடங்களில் வெந்து விடும்.

* சூடு ஆறிய பின் தயிர் + உப்பு சேர்த்து கலக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து தயிர் சாதத்தில் கலந்து பரிமாறவும்.

* சுவையான சத்தான கம்பு தயிர் சாதம் ரெடி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.