Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 21, 2016

பாதாம் அல்வா


தேவையான பொருட்கள்

பாதாம் - 1/2 கப் (இரவில் ஊற வைத்து, காலையில் அரைத்தது)
சர்க்கரை - 1/2 கப்
பால் - 1 கப்
நெய் - 1/2 கப்
குங்குமப்பூ - சிறிதளவு (பாலில் ஊற வைத்தது)

செய்முறை:

* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு நெய் ஊற்ற வேண்டும்.

* பின் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விடவேண்டும். தண்ணீர் கொதித்தவுடன் அதில் சர்க்கரை சேர்த்து கரைய விட வேண்டும்.

* பிறகு அதில் அரைத்த பாதாமை சேர்த்து, பால் மற்றும் குங்குமப்பூ சேர்த்து அடுப்பில் வைத்து, மிதமான தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

* அப்படி கிளறி விடும்போது, கலவையானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும்போது, அதில் பாதி நெய் சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து தொடர்ந்து கிளறி விடும்போது, நெய்யை அல்வா முற்றிலும் உறிஞ்சிவிடும்.

* அப்படி நெய்யானது முற்றிலும் வற்றியதும், வாணலியை இறக்கி, மீதமுள்ள நெய் சேர்த்து ஒருமுறை கிளறி ஆற வைத்தால், பாதாம் அல்வா ரெடி!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.