பெண்கள் தங்களின் வாழ்நாளில் பெரும்பகுதியை அடுப்பறையில் கழிக்கிறார்கள் என்றால், மீதி நாட்களைக் கழிப்பறையில் கழிக்க வேண்டிய நிலை உள்ளது. அதாவது, பெண்களின் உடல் அமைப்பில் ஏற்படும் சில மாற்றங்களால் ஆண்களைவிட பெண்கள், கழிவறையை அதிகமாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
ஒரு பெண் சராசரியாக 15 வயதில் பருவமடைகிறாள். 40 வயதிற்கு மேல் மெனோபாஸ் பருவத்தை அடைந்து விடுகிறாள். இதில் பெண்கள் கருத்தரிக்கும் காலம் போக, மீதமுள்ள வாழ்நாளில் 300-க்கும் அதிகமான முறை மாதவிலக்கு வரும். அதாவது, 1500 நாட்களை மாதவிடாய் உதிரப்போக்கோடுதான் கழிக்க வேண்டியுள்ளது.
இதில் கழிப்பறை இல்லாத வீடுகளில் இருக்கும் பெண்கள், மாதவிடாயின் முதல்நாள் அன்று கல்லூரிக்குச் சென்று துணி மாற்றிக் கொள்ளலாம் என நினைத்து சிறுநீரை அடக்கிக் கொண்டு போகிறாள். ஆனால், கல்லூரிக்குப் போன பிறகு அவசரமாகப் போனால், அங்கு கழிவறைக்குள் நுழையவே முடியாத அளவுக்குத் துர்நாற்றம் வீசும். அங்கு தண்ணீரும் இருக்காது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பொதுக் கழிப்பிடங்களுக்குப் போவோம் என நினைத்து மாலை வரை காத்திருப்பாள்.
மாலைக்குள் சீறுநீர் வந்துவிடக்கூடாது என நினைத்து, நாள் முழுவதும் ஒரு துளி தண்ணீர்கூடக் குடிக்காமல் இருப்பாள். வழியில் பொதுக் கழிப்பறைகளைத் தேடி அலைந்து, கடைசியாக கட்டணக் கழிப்பிடத்தைக் கண்டுபிடித்து, அங்கு தண்ணீர் இருக்கிறதா என்பதை உறுதி செய்த பிறகு, தோழியிடம் கடன் வாங்கி காசைக் கொடுத்துவிட்டு, கழிப்பறையைப் பயன்படுத்துவாள்.
ஆனால், அந்தக் கழிவறையும் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும். தண்ணீர் இருக்கிறது என சமாதானம் செய்துகொண்டு மாற்றுத் துணியை எடுத்துக்கொண்டு கழிப்பறைக்குச் சென்றால், ஏற்கெனவே பயன்படுத்திய துணியைப் போடுவதற்குக் குப்பைக் கூடை கூட இருக்காது. வேறு வழியில்லாமல் பயன்படுத்திய துணியைக் கையில் சுருட்டி, யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து வெளியில் உள்ள குப்பையில் வீசி விட்டு வருவாள்.
மாதவிடாய்க் காலங்களில் மட்டுமல்ல; பொதுவான நேரங்களிலும் சிறுநீர் கழிக்கும் வசதிகூட பெண்களுக்குக் கிடையாது. இது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமை மற்றும் அத்தியாவசியமான ஒன்று. ஆண்களுக்கு இந்தப் பிரச்னை பெரிதாக இருக்காது. அவர்கள் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் வேலைகளை முடித்துவிடுவார்கள்.
ஆனால் பெண்கள்?
தண்டவாளங்களில், சாலை ஓரங்களில், பாதுகாப்பற்ற இரவு நேரங்களில் அவசரமாக அடக்க முடியா நிலையில் சிறுநீரைக் கழிக்கும்போது, அந்த வழியாக ஆண்கள் போகும் ஒவ்வொரு முறையும் அவமானத்தால் கூனிக் குறுகி, பாதியில் எழுந்து நிற்பாள். இந்த நிலையில் மேலே சொன்ன 1500 நாட்களில் கழிவறை இல்லை என்றால், அந்த வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
கிராமங்களில்கூட அவசரத்துக்கு ஒதுங்கி இயற்கை உபாதைகளைக் கழிக்க கொல்லைப்புறம், ஒதுக்குப்புறம், வயல்வெளி என இருக்கும். ஆனால் மூச்சுக்காற்றுகூட உள்ளே புக முடியாதபடி அடுக்கடுக்காய் கட்டடங்கள் நிரம்பியிருக்கும் நகரங்களில்?
உபயோகப்படுத்த கழிவறைகள் இல்லாததால், இருள் அகலாத அதிகாலை நேரத்திலும் இரவு நேரங்களிலும் மட்டுமே சிறுநீர் கழிக்க வெளியே வரும் பெண்களைப் பதற வைக்க, புதர்களில் ஒளிந்திருக்கும் பாம்புகள் போன்ற ஆபத்தான உயிர்க்கொல்லிகள் ஒருபக்கம் என்றால், காம இச்சையைத் தீர்க்க இருளில் மறைந்து திரியும் மனிதக் கொல்லிகள் இன்னொரு பக்கம். இரவில் சிறுநீர் கழிக்க வெளியே வந்த சிறுமிகளை பலாத்காரம் செய்து கொலை செய்ததும் நம் நாட்டில்தானே!
ஆண்கள் சூழ் உலகில் அன்றாடம் சந்திக்கும் வேதனைகளையும், போராட்டங்களையும் தாண்டி கழிப்பறைபோன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வாழும் பெண்களின் அவலக் குரல்கள், சத்தமிட எத்தனித்து வெறும் மெல்லிய முனகல்களாகக் கரைந்து விடுகின்றன. பெண்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும்போது எண்ணற்ற தொற்றுநோய்கள் தாக்கும் அபாயமும் இருக்கிறது.
வாழ்வின் மிக மிக அடிப்படையான கழிப்பறை வசதிகள்கூட இல்லாதபட்சத்தில், நாடு ஏவுகணைகள் விட்டு வல்லரசாகி என்னவாகப் போகிறது? பெண்களுக்காக நீங்கள் கட்டுகிற கோவில்களில் உள்ள கருவறையைவிட அவர்களுக்கு கழிவறை முக்கியம் என்பதை இன்னும் எத்தனை பேர் சொல்ல வேண்டும்?
ஒரு நாளின் ஆரம்பம் எது என்று தெரியுமா?
யெஸ்... டாய்லெட்... உடனே 'அய்ய...' என்று முகம் சுளிக்காதீர்கள். 'பழையன கழிதலும்' என்ற வரியின் நிதர்சனம் இங்குதான் உணரப்படுகிறது. கழிவறை என்ற ஒன்று இல்லை என்றால், சுற்றுப்புறத்தின் நிலைமை என்னவாகும் என்று கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவ்வளவு முக்கியத்துவம் பெற்ற கழிவறையை பெண்கள் சரியாக உபயோகிக்கிறோமா? இல்லவே இல்லை!
முக்கால்வாசிப் பெண்களுக்குக் கழிவறையை எப்படிச் சரியாக உபயோகிக்க வேண்டும்? எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று தெரிவதே இல்லை. கழிவறையைச் சரியாக உபயோகிக்காவிட்டால்...?
1. கழிவறையைப் பொறுத்தவரையில் வெஸ்டர்ன் டாய்லெட் முறையினை விட பழைய முறை டாய்லெட்தான் பெண்களுக்கு நல்லது. ஏனெனில், ஒருவர் அமர்ந்து பயன்படுத்தும் வெஸ்டர்ன் டாய்லட் சிங்க்கில் இருந்து பல்வேறு நோய்க் கிருமிகள் பெண்களுக்குப் பரவக்கூடும்.
2. வெஸ்டர்ன் டாய்லட்டை பயன்படுத்தும்போது பெண்கள் பிறப்புறுப்பை சரியாக சுத்தம் செய்வது கடினம். இதனால் ‘யூரினல் இன்ஃபெக்ஷன்’, கருப்பை அலர்ஜி போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.
3. நார்மல் டாய்லெட்டை எடுத்துக் கொண்டால், அதனைப் பயன்படுத்தும்போது கண்டிப்பாக செருப்பணிந்து செல்ல வேண்டும். கழிவறைக்கே செருப்பு அவசியம் என்றாலும், நார்மல் டாய்லெட் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
4. உட்கார்ந்து எழ முடியாது என்பது கடினமாக இருந்தாலும், கழிவுப்பாதையை நெகிழச் செய்து கழிவை வெளியேற்ற, நார்மல் டாய்லெட் உபயோகமே சிறந்தது. எனினும், இந்த டாய்லெட் உபயோகித்த பின்பு நகங்களைச் சுத்தமாக கழுவ வேண்டும்.
5. பீரியட்ஸ் என்னும் மாதவிடாய்க் காலங்களில், கண்டிப்பாக சுத்தமான டாய்லெட்டுகளை உபயோகிக்க வேண்டியது கட்டாயம். உதிரப்போக்கின்போது கிருமிகள் பரவ அதிக வாய்ப்புள்ளதால், கருப்பை சார்ந்த பிரச்னைகள் அதிகளவில் ஏற்பட வாய்ப்புண்டு.
6. வீட்டிலும் சரி, வெளியிலும் சரி - ஆண், பெண் இருவரும் பொதுவாக பயன்படுத்தும் கழிவறைகளில் கூடுதல் கவனம் தேவை. ஆண்கள் அமர்ந்து பயன்படுத்தும் டாய்லெட்டில் பெண்கள் அமர்ந்து உபயோகிக்கும்போது கருப்பை அலர்ஜிக்கு சாத்தியக் கூறுகள் அதிகம்.
7. கருப்பை அலர்ஜியை சாதாரணமாக நினைப்பது தவறு. பிறப்புறுப்புப் புண்கள் ஏற்பட்டு, கருப்பை வாய் சீழ் பிடித்து, புற்றுநோயாக மாறக்கூட வாய்ப்புண்டு.
8. ஒவ்வொரு முறையும் டாய்லெட் சென்று வந்தவுடன், டெட்டால் அல்லது வெஜனைல் வாஷ் உபயோகித்து பிறப்புறுப்புகளைச் சுத்தம் செய்தல் அவசியம்.
9. டாய்லெட் உபயோகித்த பின்னர், கைகளை நன்றாகக் கழுவுவதுடன், வாய் கொப்பளித்தலும் அவசியம்.
10. எனவே, சுத்தமான தண்ணீர் உபயோகிக்கப்படும் கழிவறைகள்தான் நமது சாய்ஸாக இருக்க வேண்டும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ளவை எல்லாருக்கும் பொருந்தும் என்றாலும், பெண்கள் கண்டிப்பாக இவற்றைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியத்திலும் அவசியம்.
உங்கள் டாய்லெட்...உங்கள் உரிமை...உங்கள் சுகாதாரம்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.