Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 10, 2016

செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 1.5 டன் மாம்பழங்கள் பறிமுதல்


தனியார் பழக்கடையில் விற்பனைக்காக செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட, 1.5 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை கருப்புகவுண்டர், பவிழம் வீதியில் உள்ள தனியார் பழக்கடைகளில் கால்சியம் கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சோதனையில் கால்சியம் கார்பைடு கற்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது உறுதியானது. அங்கிருந்த இரு கடைகளிலிருந்து, 1.5 டன் அளவிலான மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை உணவுப்பிரிவு நியமன அலுவலர் விஜயன் கூறியதாவது:
எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில், கருப்பு
கவுண்டர் வீதி, பவிழம் வீதியில் இருந்த, 20 கடைகளில் சோதனை நடத்தினோம். சோதனையில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்தோம். இரு கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஒன்றரை டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தோம்.

கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தின் மேல் நன்றாக பழுத்தது போல தோல் மஞ்சள் நிறமாக இருக்கும். ஆனால், உள்ளே பார்த்தால் செங்கனியாக இருக்கும். மாம்பழம் வாசனை, ருசியின்றி இருக்கும். கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிட்டால் தோல் அலர்ஜி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும். அதிகமாக சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது. இயற்கை முறையில் பழுக்கும் மாம்பழங்களை பொதுமக்கள் வாங்கி சாப்பிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.