அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மீது காய்ச்சிய எண்ணெயை மனைவி ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைமறைவான மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள அரங்கப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஸ்குமார் (27). இவர் பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா என்ற கட்சி சார்பில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தற்போது தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலை சேர்ந்த ரேவதியை (26) காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலை கணவன்-மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு ராஜேஸ்குமார் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, ஆத்திரம் அடைந்த ரேவதி சமையல் எண்ணெயை அடுப்பில் வைத்து காய்ச்சி, தூங்கிக்கொண்டிருந்த தனது கணவர் மீது ஊற்றியுள்ளார். பின்னர் ரேவதி அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.
வலி தாங்க முடியாமல் ராஜேஸ்குமார் அலறி துடித்துள்ளார். அவரது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்து ராஜேஸ்குமாரை சிகிச்சைக்காக அரவக்குறிச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சின்னதாராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரேவதியை வலைவீசி தேடி வருகின்றனர்.
பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து அரவக்குறிச்சி தொகுதிக்கு ஜூன் 13ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.