அரசின் இலவச மோர் வழங்கும் திட்டத்துக்கு தனது குடும்ப உறவினரின் நிறுவனத்தில்தான் தயிர் வாங்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளது அம்மாநிலத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தமிழகம், ஆந்திரா உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் இலவச நீர், மோர் வழங்க அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
இதேபோல் ஆந்திராவிலும் இலவச நீர், மோர் வழங்க அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்துக்காக ரூ.33 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மோர் வழங்கும் திட்டத்திற்கு 'ஹெரிட்டேஜ்' பால் நிறுவனத்திடம் இருந்துதான் தயிர் வாங்க வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சுற்றறிக்கை மூலம் உத்தரவு அனுப்பியுள்ளார். இந்த ஹெரிட்டேஜ் நிறுவனம், சந்திரபாபு நாயுடுவின் குடும்ப உறவினருக்கு சொந்தமான நிறுவனம் ஆகும்.
சந்திரபாபு நாயுடுவின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, பாரதிய ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பா.ஜ.க.வின் மாநில செயலாளர் சுரேஷ் ரெட்டி கூறுகையில், ''மோர் வழங்கும் திட்டம் ஏழைகளுக்கானதா? தனது குடும்ப நிறுவன வளர்ச்சிக்கான திட்டமா? என்று புரியவில்லை. ஹெரிட்டேஜ் நிறுவனம் இல்லாமல் மற்ற நிறுவனங்களில் தயிர் வாங்கினால், அது ஏழைகளுக்கு ஆகாதா?'' என்று கேள்வி எழுப்பினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.