Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 3, 2016

எறும்புகள் கடித்ததால் பச்சிளம் குழந்தை பலி


ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 29ந் தேதி லட்சுமி என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு இருந்தது.

 இந்நிலையில் நேற்று அதிகாலை, 4 நாளே ஆன அந்த குழந்தையின் மீது ஏராளமான எறும்புகள் மொய்த்து கொண்டிருந்தன. இதை கண்ட லட்சுமி உடனே அங்கிருந்த செவிலியர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார். எறும்புகளை செவிலியர்கள் துடைத்த போது குளுக்கோஸ் பாட்டில் குழந்தை மீது விழுந்துள்ளது. இதில் குழந்தையின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

 அடுத்த Ñ மணி நேரத்தில் அந்த குழந்தை இறந்தது. எறும்புகள் கடித்ததாலும், குளுக்கோஸ் பாட்டில் விழுந்ததாலும் குழந்தை இறந்ததாக உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கு மறுப்பு தெரிவித்த டாக்டர்கள், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதாலேயே குழந்தை இறந்தது என்றனர்.

இதுபற்றி அறிந்த காங்கிரஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
 இதே போல சில மாதங்களுக்கு முன்பு குண்டூர் அரசு ஆஸ்பத்திரியில் எலி கடித்து ஒரு குழந்தை இறந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.