அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக அவரது கணவரை போலீஸார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்தவர் சோனியா (48). இவரது கணவர் ஜேம்ஸ் நல்லான் (63). இவர்கள் இருவருமே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
இந்தத் தம்பதியினரின் இரண்டு மகன்களும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று அவர்களின் வீட்டுக்குள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.
இதனைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, சோனியா ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அருகில் அவரது கணவர் ஜேம்ஸ் நல்லான் மட்டும் இருந்துள்ளார்.
இதையடுத்து, அவர்கள் அவரை மீட்டு அருகிலிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சோனியா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக சான் ஜோஸ் நகர போலீஸார், சோனியாவின் கணவர் ஜேம்ஸ் நல்லானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அவர்களின் உறவினர்கள் கூறியதாவது:
தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் ஜேம்ஸ் நல்லான் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். மூன்று மாதம் கழித்து கோமா நிலையிலிருந்து அவர் மீண்ட போது, அவரது சுபாவங்கள் முரட்டுத் தனமாக மாறிவிட்டது என அவர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் 3-வது பெரிய நகரம் சான்ஜோஸ். இந்த நகரத்தில் இண்டிகோ ஓக் வீதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தவர்கள் ஜேம்ஸ் நல்லான்- சோனியா நல்லான் (வயது 48) தம்பதியர் இந்தியர்கள். இந்த தம்பதியருக்கு சல் (21), நிதின் (20) என 2 மகன்கள். அவர்கள் அங்கு படித்து வருகின்றனர்.
சோனியா என்கோர் செமிகாண்டக்டர்ஸ் நிறுவனத்தில் தொழில் நுட்ப ஆள் சேர்ப்பாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி சோனியாவை கணவர் ஜேம்ஸ் நல்லான் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு வீழ்த்தினார். குண்டு சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தார் அங்கு விரைந்து சென்று, ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த சோனியாவை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவரது உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.
இந்த படுகொலை சம்பவம், அக்கம்பக்கத்தாரை மட்டுமல்ல, இருவருடைய குடும்பத்தாரையும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
சோனியாவின் படுகொலை குறித்த தகவல் அறிந்ததும், ஜேம்ஸ் நல்லானின் சகோதரர் கிறிஸ் நல்லான் அங்கு உடனடியாக சென்றார். அற்புதமான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்கள் என அவர் தனது அண்ணன், அண்ணியைப் பற்றி குறிப்பிட்டார். சோனியாவும், ஜேம்ஸ் நல்லானும் ஒரு நிறுவனத்தில் ஒன்றாக சந்தித்து, பேசி பழகி மணந்து கொண்டதாகவும் கிறிஸ் நல்லான் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வீட்டில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தபோது ஜேம்ஸ் கீழே தவறி விழுந்து கோமா நிலைக்கு சென்று மீண்டதாகவும், வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டபோதும், அண்ணி அவரை நன்றாக கவனித்துக்கொண்டதாகவும் கிறிஸ் நல்லான் கூறினார்.
இந்த கொலைச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஜேம்ஸ் நல்லானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.