Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 9, 2016

அட்சய திருதியைக்கு 30 சதவீதம் நகை விற்பனை குறைய வாய்ப்பு


தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் அட்சய திருதியைக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 30 சதவீதம் நகை விற்பனை குறைய வாய்ப்பு உள்ளது என்று தங்கம்-வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் கூறினார்.

அட்சய திருதியை

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய 3-வது திருதியையான வளர்பிறை திருதியை ‘அட்சய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. ‘அட்சய திருதியை’ தினத்தில், சிறிய குண்டுமணி அளவு தங்க நகை வாங்கினால் கூட அந்த ஆண்டு முழுவதும் செல்வ செழிப்போடு வாழலாம் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நாளில் என்ன பொருள் வாங்கினாலும் அவை பன்மடங்காகும் என்பது நம்பிக்கையாகும். அதன்படி தங்கம் வாங்குவதற்கு உகந்த தினமாகவும், பொன்னான நாளாகவும் கருதப்படும் ‘அட்சய திருதியை’ நேற்று இரவு 9.01 மணி முதல் இன்று இரவு 7.10 மணி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

தங்கம்-வெள்ளி

சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 853-க்கும், பவுன் ரூ.22 ஆயிரத்து 824-க்கு விற்பனையான தங்கம், நேற்று கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் விலை அதிகரித்து, ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 873, பவுன் ரூ.22 ஆயிரத்து 984-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

‘அட்சய திருதியை’ முன்னிட்டு பொதுமக்கள் நகைகள் வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் கடைகளில் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை என்று நகை வியாபாரிகள் சங்கத்தினர் கூறினர்.

விற்பனை குறைவு?

‘அட்சய திருதியை’ விற்பனை குறித்து, சென்னை தங்கம்- வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜலானி, ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

கடந்த ஆண்டு ‘அட்சய திருதியை’ சமயத்தில் 2 ஆயிரம் 500 கிலோ தங்க நகைகள் விற்பனையாகின. கடந்த ஆண்டை காட்டிலும் தங்கம் விலை இந்த ஆண்டு பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 776 விலை அதிகரித்து உள்ளது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பொதுமக்களுக்கு பணத்தை வெளியே கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 சதவீதம் விற்பனை குறைய வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாலை கடைகள் திறப்பு

இருந்தாலும் ‘அட்சய திருதியை’யொட்டி, இன்று (திங்கட்கிழமை) அதிகாலையிலேயே நகைகடைகள் திறக்கப்படும்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ‘அட்சய திருதியை’க்கு தங்கம் கிராமுக்கு ரூ.97-ம், பவுனுக்கு ரூ.776-ம் விலை உயர்ந்துள்ளது. ‘அட்சய திருதியை’ இன்றும் நீடிப்பதால், தங்கம் விலையில் சிறிய அளவு ஏற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 3 நாட்களாக ஏற்றம் இறக்கம் இல்லாமல் ஒரே சீரான விலையில் இருந்த வெள்ளி நேற்று கிராமுக்கு ரூ.44.80 காசும், கிலோவுக்கு ரூ.41 ஆயிரத்து 875-க்கும் விற்பனையானது.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் பாதுகாப்பு

‘அட்சய திருதியை’யொட்டி, தியாகராயநகர், பெரம்பூர், புரசைவாக்கம் உள்பட நகரின் முக்கிய பஜார் வீதிகளில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.