Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 4, 2016

அ.தி.மு.க.வால் தேர்தல் அறிக்கைகூட தயாரிக்க முடியவில்லை! -விளாசும் குஷ்பு


இது குறித்து, கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் கூறிய குஷ்பு, ''தமிழகம் முழுவதும் சென்று தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறேன். தமிழக மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டனர். இந்த கூட்டணியை வெற்றி பெறச்செய்ய மக்கள் முடிவு செய்துவிட்டனர். அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். தி.மு.க., காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மக்கள் நலத்திட்டங்கள் கூறப்பட்டுள்ளன.

ஆனால் அ.தி.மு.க. இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. அவர்களால் தேர்தல் அறிக்கையைகூட தயாரிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு குழம்பி போய் உள்ளனர். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இலவச திட்டங்களுக்கு முக்கியத்துவம் இல்லை. ஆனால் விவசாய கடன் தள்ளுபடி, மது விலக்கு போன்றவற்றுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. தமிழகத்தில் 7 கோடி மக்கள் உள்ளனர். இவர்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை இல்லை. தமிழகத்தில் தொழில்வளம் இல்லாதது தான் இதற்கு காரணம். மின் உற்பத்தி சரியாக இல்லாததால் தொழில்வளம் பெருகவில்லை.

ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்த முறை மக்களை ஏமாற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார். ஆனால் மக்களை ஏமாற்ற முடியாது. மாற்றத்தை மக்கள் விரும்புவதால் அ.தி.மு.க.வுக்கு மாற்றாக தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை மக்கள் விரும்புகிறார்கள்.<

மேலும், தேர்தல் ஆணையம் தமிழகத்தில் அதிகாரிகளை மாற்றி உள்ளது. இதனால் அ.தி.மு.க.வுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. தோல்வி பயம் காரணமாக தான் அதிகாரிகளை மாற்றக்கூடாது என தேர்தல் கமிஷனரிடம் அ.தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளனர். மடியில் கணம் இல்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.