Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 3, 2016

அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது


2 வாரம் நீடிக்கக்கூடிய அக்னி நட்சத்திரம் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
கோடை காலம்
தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களாக தமிழ்நாடு முழுவதும் வெயில் அதிகமாக கொளுத்தி வருகிறது. பல மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது.
 குறிப்பாக வேலூர், திருச்சி, தர்மபுரி, சேலம், மதுரை, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் அதிகமாக வெயில் பதிவாகி உள்ளது.
தாகம் நிற்பதில்லை
மொத்தத்தில் தமிழ்நாட்டில் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட இடங்கள் தவிர மற்ற இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் நிற்பதில்லை.
மாலை 5 மணிக்கு பிறகுதான் காற்று சற்று வீசுகிறது. இரவில் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. இருப்பினும் இரவில் தூக்கம் வராத அளவுக்கு வெப்பம் இரவிலும் எதிரொலிக்கிறது.
அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது
இந்த நிலையில் அதிகமாக வெயில் அடிக்கக்கூடிய அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் நாளை(புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த வெயில் 14 நாட்கள் நீடிக்கும். 28–ந்தேதி அக்னி நட்சத்திரம் முடிவடைகிறது.
அக்னி நட்சத்திரம் காலத்தில் பெரும்பாலும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அக்னி நட்சத்திரம் காலத்தில் மழை பெய்து வெப்பம் குறைந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் இன்று வெயில் எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை மைய அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–
4 டிகிரி வெயில் அதிகரிக்கும்
கோடை வெயில் தமிழ்நாட்டில் அடித்து வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் அதிக பட்சம் 99 டிகிரி வெயில் பதிவாகும். தமிழ்நாட்டில் வழக்கத்தை விட சற்று வெப்பம் அதிகரிக்கும். அதாவது சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் அடிக்கிறது. அங்கு எப்படியும் வழக்கத்தை விட 4 டிகிரி வெயில் அதிகமாக இருக்கும்.
கடல் காற்று சற்று தாமதமாக வீசும். அதனால் வெப்பம் அதிகமாக வாய்ப்பு உள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 1 செ.மீ.மழை பெய்துள்ளது.
இவ்வாறு வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.