Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 21, 2016

பாசக்கார கன்றுக்குட்டி... குடும்பத்தினர் நெகிழ்ச்சி



திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஒரு கன்றுக்குட்டி அதிக பாசத்துடன் எஜமானர் வீட்டில் வலம் வருகிறது. பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிச்சுமணி. வீட்டில் ஆடு, மாடு, நாய்கள் போன்ற வளர்ப்பு பிராணிகளை வளர்த்து வருகிறார். அவர் வளர்க்கும் கன்றுக்குட்டி ஒன்று அவரது குடும்பத்தினருடனும் உறவாடி விளையாடுவது ஆச்சரியமாக உள்ளது. வீட்டின் மாடியில் பிச்சுமணி குடும்பத்தினரும், வீட்டின் கீழ்பகுதியில் அவரது பெற்றோரும் வசித்து வருகின்றனர்.

தினமும் கன்றுக்குட்டி, வீட்டு மாடிப்படி ஏறி சென்று பிச்சுமணி குடும்பத்தினரை கதவில் முட்டி எழுந்திருக்க வைக்கிறது. பின்னர் வீட்டுக்குள் புகுந்து அவர்கள் படுத்த இடத்தில் படுத்துக்கொள்கிறது. சிறிது நேரம் கழித்து தூங்கி கொண்டிருக்கும் பிச்சுமணியின் மகன்களை பாசமாக மோதி எழுப்புகிறது. அதேபோல் இரவானதும் பிச்சுமணி குடும்பத்தினர் தூங்கும் வரை அவர்களுடன் விளையாடி விட்டு சென்று விடுகிறது.

பிச்சுமணி குடும்பத்தினர், தாங்கள் சாப்பிடும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் கன்றுக்குட்டிக்கும் கொடுக்கின்றனர். தினமும் கன்றுக்குட்டியை குளிக்க வைத்து துண்டால் துடைத்து பராமரித்து வருகின்றனர். அதேபோல் பிச்சுமணி வீட்டில் வளர்த்து வரும் நாய், ஆடுகளும் செய்வதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.