Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 23, 2016

வெண்ணந்தூர் அருகே அதிமுக தொண்டர் கொடூரக்கொலை


அதிமுக தொண்டர் ஒருவர் வெண்ணந்தூர் அருகே கல்லால் தக்கப்பட்டு கொடூரமாக நேற்று கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இந்த கொலையை செய்த மர்ம நபர்கள் யார் என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வெண்ணாந்தூர் சர்க்கார் தோப்பு பகுதியை சேர்ந்த அதிமுக தொண்டரான 55 வயதான மெய்யழகன் சமையல் செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் நேற்று அவர் மது அருந்த சென்றார். சென்றவர் வீடு திரும்பாததால் அவருடைய மகன் ஊரெங்கும் தேடியுள்ளார்.

இந்த நிலையில் வெண்ணந்தூர் ஏரிக்கரையில் ஒருவர் முகத்தில் கல்லால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த தகவல் கிடைத்து அவரது மகன் சென்று பார்த்த போது தந்தை மெய்யழகன் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, வெண்ணந்தூர் காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மெய்யழகனை யார், எதற்காக கொலை செய்தனர் எனத் தெரியவில்லை. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.