Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 19, 2016

கார்டனில் குவிந்த தொண்டர்கள்..! உற்சாகத்தில் அதிமுக


தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் திமுக முன்னிலையில் இருந்து வந்தது. பின்னர் அதிமுக முன்னிலை வகித்தது. தொடர்ந்து இரண்டு கட்சிகளும் சமநிலையில் முன்னிலை வகித்து வந்தது.


வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சுமார் ஒரு மணி நேரத்தில் அதிமுக முன்னிலை பெற்றது. திமுக பின்னடவை சந்தித்தது. இரண்டு மணி நேர வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் அதிமுக 117 தொகுதிகளிலும், திமுக 81 தாெகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாமக 4 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால், தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமாகா கூட்டணி ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்கவில்லை. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாயலத்தில் குறைந்த அளவிலேயே தொண்டர்கள் இருக்கின்றனர்.





தொடர்ந்து அதிமுக முன்னிலை வகித்து வருவதால் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலும், முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்திலும் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் அதிமுக வினர் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.