ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த பெண்கள் பொருட்களை போல் வளைகுடா நாடுகளில் விற்பனை செய்யப்படுவதாக ஆந்திராவை சேர்ந்த மந்திரி தெரிவித்துள்ளார்.
பெண்கள் பொருட்களை போல் வளைகுடா நாடுகளில் விற்பனை - ஆந்திர மந்திரி அதிர்ச்சி தகவல்
ஐதராபாத்:
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த பெண்கள் பொருட்கள் போல் வளைகுடா நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறார்கள் என ஆந்திர மந்திரி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில வெளிநாடு வாழ் இந்திய நல மந்திரி பல்லே ரகுநாத ரெட்டி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் ”ஆந்திராவில் இருந்து வளைகுடா நாட்டுக்கு வேலைக்கு சென்ற பெண் தொழிலாளர்கள் விசா முடிந்த பின் அங்கு இருந்தவர்களும், முதலாளிகளால் குற்றம் சாட்டபட்டவர்களும் அங்குள்ள சிறைகளில் வாடுகிறார்கள். அவர்கள் அங்கிருந்து தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரைவில் அவர்களுக்கு தேவையான விசா ஆவணங்கள் வழங்கி அவர்கள் சொந்த ஊர் திரும்ப இலவச பயணம் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும்.
இந்த விஷயத்தில் வளைகுடா நாடுகள் தலையிடவும் அவர்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் உதவி செய்யவும் அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும்
அரசு புள்ளிவிவரங்கள் படி பஹ்ரைன், குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆறு வளைகுடா நாடுகளில் ஒரு மதிப்பீட்டின்படி அறுபது லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இதில் கிராமங்களில் உள்ள பெண்கள் அதிக சம்பளம் தருவதாக ஆள் சேர்க்கும் முகவர்களால் ஏமாற்றபட்டு அங்கு அழைத்து செல்லபட்டு சிறையில் வாடுகிறார்கள். இவர்களுக்கு உரிய சரியான அதிகாரபூர்வ டேட்டா தகவல்கள் இல்லை. ஆனால் இவ்வாறு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் அங்குள்ள சிறைகளில் வாடுகிறார்கள்.
சிலர் சுற்றுலா விசாவில் சென்று அதிக நாள் இருந்தவர்கள், அவர்களால் அபராத தொகையை கட்டி சொந்த நாடு திரும்ப முடியவில்லை. சிலர் வெளியேற விசா இல்லாதவர்கள். சில சிறு குற்றங்களுக்காக சிறையில் வழக்குகளுக்காக காத்திருக்கிறார்கள்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள பெண்கள் ஒரு சில்லரை கடையில் பொருட்கள் விற்கப்படுவதை போன்று விற்கப்பட்டு உள்ளனர்.
சவுதி அரேபியாவிற்கு பெண்கள் 4 லட்ச ரூபாய்க்கும், பஹ்ரைன், குவைத், மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்ச ரூபாய் வரைக்கும் விற்கபடுகின்றனர்” என்று அதிர்ச்சியளிக்கும் தகவலை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.