மும்பை, ஓசிவாரா பகுதியை சேர்ந்தவர் டி.வி. நடிகர் அன்சுல் பாண்டே (வயது 29). இவர் சம்பவத்தன்று நள்ளிரவு ஜூகு பீச் பகுதியில் உள்ள ரோட்டில் காரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்த போலீசார் டி.வி நடிகர் அன்சுல் பாண்டேவின் காரை மறித்து சோதனை நடத்தினர். அப்போது அன்சுல் பாண்டே மது அருந்தி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து ஜூகு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் மதுஅருந்தியதை உறுதிப்படுத்தும் சோதனைக்காக டி.வி. நடிகரை போலீசார் கூப்பர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது டி.வி. நடிகர் ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்களிடம் ரகளையில் ஈடுபட்டதாக போலீஸ்காரர் ஒருவர் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.