Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 13, 2016

வரதட்சணை கொடுமை செய்து மனைவி கொலை வங்கி அதிகாரி, பெற்றோருக்கு ஆயுள் தண்டனை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


வரதட்சணை கொடுமை செய்து மனைவியை கொலை செய்த வங்கி அதிகாரி மற்றும் அவரது பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டது.

மனைவி மர்மசாவு

நவிமும்பை கலம்பொலி பகுதியை சேர்ந்தவர் அகிலேஷ் (வயது70). இவரது மனைவி சுனிதா (60). இவர்களது மகன் சுமித்குமார் (39). இவர் தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு மது (28) என்ற பெண்ணை சுமித்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். மது கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ந்தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ஆயுள் தண்டனை


இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் வரதட்சணை கொடுமை செய்து மதுவை கணவர் சுமித் குமார், மாமனார் அகிலேஷ், மாமியார் சுனிதா ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது அவர்களுக்கு எதிராக 10 பேர் சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது குற்றம் நிரூபிக்கப்பட்ட சுமித்குமார் உள்ளிட்ட மூன்று பேருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.