மனைவி, மகள் மற்றும் மாமியாரை கொலை செய்தவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
வீட்டை எழுதி கேட்டார்
சந்திராப்பூரை சேர்ந்தவர் இம்தாத். இவரது மனைவி ஷம்சாத். இவர்களுக்கு ஒரு மகள் இருந்தார். இம்தாத், மனைவி ஷம்சாத்திற்கு சொந்தமான வீட்டில் தான் வசித்து வந்தார். இந்த நிலையில் இம்தாத் வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு தொடர்ந்து மனைவியிடம் வலியுறுத்தி வந்தார். ஆனால் ஷம்சாத் வீட்டை கணவர் பெயருக்கு எழுதிக்கொடுக்கவில்லை.
இதையடுத்து இம்தாத் கோபித்து கொண்டு மனைவியை பிரிந்து சென்றுவிட்டார்.
வேறு ஒருவருடன் திருமணம்
கணவர் இம்தாத் பிரிந்து சென்ற பின் ஷம்சாத் வேறொரு வாலிபரை திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் இம்தாத் சில வருடங்களுக்கு பின் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தார். அவர் மனைவியிடம் மீண்டும் வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு சண்டைப்போட்டார். அப்போது ஷம்சாத் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதை இம்தாத் அறிந்து கொண்டார். இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
3 பேர் கொலை
இதில் ஆத்திரமடைந்த இம்தாத், மனைவி ஷம்சாத்தை கத்தியால் குத்தினார். மேலும் அப்போது வீட்டில் இருந்த மாமியார் மற்றும் சண்டையை தடுக்க வந்த தனது மகளையும் கத்தியால் தாக்கினார். இந்தநிலையில் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு சந்திராப்பூர் மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதில் ஷம்சாத்தும், அவரது மகளும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஷம்சாத்தின் தாயார் சில நாட்கள் கழித்து சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆயுள் தண்டனை
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சந்திராப்பூர் போலீசார் இம்தாத்தை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சந்திராப்பூர் செசன்ஸ் கோர்ட்டு மனைவி, மகள் மற்றும் மாமியாரை கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக இம்தாத்திற்கு தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து இம்தாத் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், குற்றவாளி ஆத்திரத்தில் சுயநினைவை இழந்து இதுபோல நடந்து கொண்டு இருக்கிறார். இது திட்டமிட்ட ஒரு செயலாக இருப்பது போல தெரியவில்லை என கூறி இமாமிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு அளித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.