Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 31, 2016

வீடியோ: சச்சின், லதா மங்கேஷ்கரை கிண்டல் வீடியோ போலீசில் புகார்


ஏஐபி குழுவைச் சேர்ந்த தன்மே பட் கடந்த மே 26ம் தேதி யூடியூபில் "Sachin vs Lata Civil War" என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்

தன்மே பட். அந்த வீடியோவில் அதற்குபல் பிரபலங்களையும், சில கொச்சையான வார்த்தைகளையும் பயன்படுத்தி உள்ளார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சச்சினும் லதா மங்கேஷ்கரும் 'யார் பெஸ்ட்… கோலியா, சச்சினா' என்பது குறித்து இந்த வீடியோவில் விவாதிக்கிறார்கள்.

இது குறித்து நடிகர் அனுபம் கெர், தனது டுவிட்டரில் இது காமெடி கிடையாது. இது அசிங்கம், அவமானம்’ என கூறி உள்ளார்.

 பலரும் இந்த வீடியோ பதிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஏஐபி மற்றும் தன்மே பட்டிற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகராஷ்டிர முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்-க்கு சிவசேனா கடிதம் எழுதியுள்ளது.

சச்சின், லதாமங்கேஷ்கர் வீடியோவிற்கு எதிராக மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா அமைப்பினர் மும்பை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.