Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 10, 2016

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு வெட்டோரி பெயரை பரிந்துரை செய்த விராட்கோலி


2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியுடன் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் டன்கன் பிளட்சர் (ஜிம்பாப்வே) பதவி காலம் முடிந்தது. அதன் பிறகு இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி இயக்குனராக இருந்து அணியை வழிநடத்தி வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவருமான வெட்டோரி பெயரை இந்திய டெஸ்ட் அணி மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனுமான விராட்கோலி பரிந்துரை செய்துள்ளார்.

37 வயதான வெட்டோரி தற்போது ஐ.பி.எல். போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் போட்டிக்கான பிரிஸ்பேன் ஹீட் அணியின் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். இதற்கிடையில் பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் கேப்டன் டிராவிட்டை நியமிக்க முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாயின. வெட்டோரி பெயர் பரிந்துரை செய்து இருப்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தரப்பில் யாரும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.