Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 26, 2016

வீடியோ: மன்தீப் சிங்குடன் பஹ்ரா டான்ஸ் ஆடும் விராட் கோலி, கிறிஸ் கெய்ல்


விராட் கோலி, கிறிஸ் கெய்ல் ஆகியோர் பெங்களூர் அணியின் மன்தீப் சிங் உடன் இணைந்து பஹ்ரா டான்ஸ் ஆடி அசத்தியுள்ளனர். இந்த வீடியோ பெங்களூர் அணியின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

வீடியோ: மன்தீப் சிங்குடன் பஹ்ரா டான்ஸ் ஆடும் விராட் கோலி, கிறிஸ் கெய்ல்
ஐ.பி.எல். சீசன் 9 கிரிக்கெட் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியின் கிறிஸ் கெய்ல், விராட் கோலி, ஷேன் வாட்சன் ஆகியோர் மைதானத்திற்குள் ஆக்ரோஷமாக செயல்படுவார்கள்.

ஆனால், மைதானத்திற்கு வெளியே முற்றிலும் மாறுபட்டவர்கள். தங்களது நேரத்தை சிறந்த கேளிக்கையுடன் செலவழித்து வருகிறார்கள். பெங்களூர் அணி சார்பில் ஏற்பாடு செய்த ஒரு விழாவில் கெய்ல், விராட் கோலி டான்ஸ் ஆட வாட்சன் மியூசிக் வாசித்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது.

தற்போது விரட் கோலி, கிறிஸ் கெய்ல் ஆகியோர் அந்த அணியின் மன்தீப் சிங் உடன் சேர்ந்து பஹ்ரா டான்ஸ் ஆடி அசத்தியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாக மாறிவருகிறது.

பஹ்ரா டான்ஸ் ஆடி பழக்கப்பட்ட மன்தீப் சிங், விராட் கோலி மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோருக்கு அதை கற்றுக்கொடுக்கிறார். அதேபோல், அவர்கள் ஸ்டெப் வைத்து அருமையாக ஆடுகிறார்கள்.

அந்த வீடியோவை காண கிளிக் செய்க....



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.