Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 25, 2016

டெஸ்ட் அணியில் புஜாரா, ஜடேஜா, சாஹா: தேர்வு குழுவினர் மீது வினோத் காம்ப்ளி சாடல்


வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணயில் ரஞ்சிப் போட்டியை வென்ற மும்பை அணி வீரர்களை ஏன் தேர்வு செய்யவில்லை என இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குறித்து முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி கேள்வி எழுப்பியுள்ளார்.

டெஸ்ட் அணியில் புஜாரா, ஜடேஜா, சாஹா: தேர்வு குழுவினர் மீது வினோத் காம்ப்ளி சாடல்
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணயில் ரஞ்சிப் போட்டியை வென்ற மும்பை அணி வீரர்களை ஏன் தேர்வு செய்யவில்லை என இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குறித்து முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஜூன் 11 முதல் 22 வரை ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தோனி தலைமையிலான இந்திய அணியில் ஃபசல், யுவேந்திர சாஹல், ஜெயந்த் யாதவ், கருண் நாயர், மன்தீப் சிங் ஆகிய 5 பேர் புதுமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதனோடு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. அதில் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் புதுமுக வீரராக இடம்பிடித்துள்ளார். விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணிக்கு ரஹானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணித் தேர்வு குறித்து முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி கடுமையாக விமரிசித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இதுகுறித்து கூறுகையில் ‘‘தேர்வுக்குழுவினரே, நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள அணியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால்தான் உங்களைப் போன்றவர்களை ஜோக்கர்ஸ் என்று ஜிம்மி அமர்நாத் குறிப்பிட்டார்.

நான் இந்திய அணியில் இருந்தபோது மட்டுமல்ல அதற்குப் பிறகும் உள்ள இதுபோன்ற ஒரு தேர்வுமுறையால் நான் மிகவும் கடுப்பாகிறேன். தேர்வுக்குழுவினர் பலருடைய வாழ்க்கையை அழித்துள்ளார்கள்.

மும்பை அணி ரஞ்சி சாம்பியனாக உள்ளது. ஆனால் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் ரோஹித் சர்மா, ரஹானே தவிர ஒரு மும்பை வீரர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர், தரேவை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை? அவர்கள் நிச்சயம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் உள்ளூர் போட்டிகளில் தங்களுடைய திறமையை நிரூபித்துள்ளார்கள். நான் மும்பை வீரர்களுக்கு ஆதரவாகப் பேசவில்லை. அவர்களுடைய 6 மாத உழைப்பு வீணாகியுள்ளது.

தேர்வுக்குழுவினருக்கு ஒரு யோசனையும் கிடையாது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு எந்தமாதிரியான அணியைத் தேர்வு செய்திருக்கிறார்கள்? புஜாரா, ஜடேஜா, சாஹா மற்றும் ஆறு வேகப்பந்து வீச்சாளர்கள்! எதன் அடிப்படையில், புஜாரா, சாஹா, ஜடேஜா ஆகியோர் அணியில் தேர்வாகியுள்ளார்கள்? புஜாராவும் சாஹாவும் உள்ளூர் போட்டிகளிலும் சரியாக விளையாடவில்லை. தேர்வுக்குழுவினரே, தயவு செய்து விளக்குங்கள். ஐ.பி.எல். தொடரை வைத்து வீரர்களை தேர்வு செய்தால், ஏன் உள்ளூர் தொடர்களை நடத்துகிறார்கள். அதற்குப்பதில் முழுவதும் ஐ.பி.எல். தொடரை நடத்த வேண்டியதுதானே?’’ என்று தன் டுவிட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.

வினோத் காம்ப்ளியின் இந்த கருத்து பி.சி.சி.ஐ. தேர்வுக்குழுவினர்களிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.