மும்பை விமானநிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தூசிப்படிந்து கிடக்கும் விஜய் மல்லையாவின் சொகுசு விமானத்தை ஏலத்தில் விட சேவை வரித்துறை தீவிரம் காட்டி வருகிறது.
தூசிப்படிந்த விமானம்
விமான நிறுவனம், மதுபானம் போன்ற தொழில்களில் கொடிகட்டி பறந்த விஜய் மல்லையா ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி விட்டார். தொழில் அதிபர்கள் மத்தியில் ஜாம்பவானாக வலம் வந்த விஜய் மல்லையா தனது சொந்த பயன்பாட்டுக்காக சொகுசு விமானம் ஒன்றையும் வைத்து இருந்தார்.
இந்த சொகுசு விமானத்தில் 25 பேர் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் உள்பகுதியில் கடவுள்களின் உருவம் வரையப்பட்டுள்ளது. விமானத்தின் வெளிப்புறத்தில் மல்லையாவின் மகன் மற்றும் 2 மகள்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. விமானத்தின் மூக்கு பகுதியில் மல்லையாவின் நிறுவன அடையாளமான ‘யுபி’ லோகோ பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த சொகுசு விமானம் கடந்த 3 ஆண்டுகளாக மும்பை விமான நிலையத்தில் தூசிப்படிந்த நிலையில் கிடக்கிறது.
ஏலம் விடப்படுகிறது
சேவை வரித்துறை விஜய் மல்லையாவிடம் இருந்து பெற வேண்டிய ரூ.500 கோடி பாக்கிக்காக இந்த சொகுசு விமானத்தை ஏலத்தில் விட திட்டமிட்டது. கடந்த 12 அல்லது 13–ந் தேதிகளில் இந்த விமானத்தை ஏலத்தில் விட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் விமானத்தை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை என கூறப்படுகிறது.
எனவே விமானத்தை மீண்டும் ஜூன் 29 அல்லது 30–ந்தேதி ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் முன் பணமாக ரூ.1 கோடி செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மாதம் விஜய் மல்லையாவின் கோவா பங்களா வீடு, மும்பையில் உள்ள கிங்பிஷர் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஏலம் விடப்பட்டது. இதனை ஏலத்தில் எடுக்கவும் யாரும் ஆர்வம் காட்டாதது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.