அமெரிக்காவில் கார் உற்பத்திக்கு பெயர் பெற்றது, டெட்ராய்டு நகரம். அந்த நகரத்தை சேர்ந்த 3 குழந்தைகள் தங்களது பாட்டியுடன் வசித்து வந்தனர்.
சம்பவத்தன்று அந்த பாட்டி சமையல் அறையில் சமைத்துக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. அவர்களில் ஒருவரான மரியா டேவிஸ் என்ற 5 வயது பெண் குழந்தை, தலையணையின் கீழே இருந்து கைத்துப்பாக்கியை எடுத்து விளையாடினாள். அவள் தவறாக விசையை அழுத்தி விட்டாள். இதனால் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தாள்.
துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு அங்கு வந்த பாட்டி, நடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த பேத்தி மரியாவை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றார். ஆனால் அவளை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.
இந்த சம்பவத்தில் அந்த சிறுமியுடன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு வயது மற்றும் 3 வயதான குழந்தைகள் காயமின்றி தப்பினர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.