இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கி எதிரணி பந்து வீச்சாளர்களை மிரளச்செய்தவர் விரேந்திர சேவாக். அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன சேவாக் தெண்டுல்கருடன் 93 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியுள்ளார். இந்த நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சேவாக், தெண்டுல்கரையும் விராட் கோலியையும் ஒப்பிடுவது நியாயமற்றது என்று தெரிவித்துள்ளார்.
சேவாக் நிகழ்ச்சியின்ல் பேசியதன் விவரம் வருமாறு:- “ இரண்டு வீரர்களை யாருமே ஒப்பிட முடியாது. என்னை சிலர் தெண்டுல்கருடனும் விவியன் ரிச்சர்ட்சுடனும் ஒப்பிட்டனர். ஆனால், இது நியாயமில்லாத ஒன்று. ஏனெனில் விவியன் ரிச்சர்ட்ஸ் விளையாடிய கால கட்டத்தில் இருந்து முற்றிலும் வேறு கால காட்டத்தில் நான் விளையாடினேன். எனவே, சச்சின் தெண்டுல்கரையும் விராட் கோலியையும் ஒப்பிடக்கூடாது என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
இரவு பகல் டெஸ்ட் போட்டி பற்றி பேசிய சேவாக், இது பற்றி(இந்தியாவில் நடத்தப்படுவது பற்றி) ஊடகங்களில் தான் கூறப்படுகிறது. ஆனால், இதில் தெளிவு இல்லை.பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு இது பற்றி நாம் விவாதித்தால் சிறப்பாக இருக்கும். ஆனால், பகல் -இரவு டெஸ்ட் போட்டிகள் வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும் ஆகும். ஆஸ்திரேலியாவில் இத்தகைய போட்டிகளை நாம் பார்த்துள்ளோம். ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரராக வர்ணணையாளராக, கிரிக்கெட் ரசிகனாக எனது விருப்பம் இந்தியாவில் இத்தகையை போட்டி நடத்த வேண்டும் என்பதே ஆகும்” என்றார்.
சச்சின் தெண்டுல்கர், தோனி, அசாரூதின் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவதை மேற்கோள் காட்டி, உங்களின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என கேட்ட போது, தற்போது வரை இது போன்ற எந்த ஆஃபரும் வரவில்லை” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.