Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 30, 2016

பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி மரத்தில் தொங்கவிடபட்டார்


உத்தரபிரதேச மாநிலம் பராச் மாவட்டம் நன்பரா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது பெண் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென காணாமல் போய் விட்டார்.
அந்த பெண்ணை அவளது பெற்றோரும், உறவினர் களும் பல இடங்களிலும் தேடினார்கள்.

இந்த நிலையில் சனிக் கிழமை காலை அந்த பெண் கிராமத்தின் எல்லையில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிண மாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத் துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாணை நடத் தினார்கள்.
அப்போது அந்த பெண் ணின் தந்தை 3 வாலிபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். அந்த 3 பேரும் கிராமத்தில் இருந்து தலை மறைவாகி இருந்தனர்.

இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத் தினார்கள். அதன் பேரில் சனிக்கிழமை சர்விஜித் யாதவ் என்பவன் பிடிபட் டான். நேற்று இம்ரான் என்ப வன் கைது  செய்யப்பட் டான். கான்ஷியாம்  மவுர்யா  என்பவன் மட்டும்  தப்பி ஓடி தலைமறைவாகி விட் டான். அவனை பிடிக்க தனிப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட வாலிபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை  திட்ட மிட்டு கடத்தியுள்ளனர். பிறகு 3 பேரும் அந்த பெண்ணை  கற்பழித்து கொலை செய்துள்ளனர். அதன் பிறகு அந்த பெண் தற்கொலை செய்து கொண் டது போல நாடகமாட, அந்த பெண்ணை மரத்தில் தூக் கில் தொங்க விட்டுள்ளனர் என்பது  தெரிய வந்தது. இதை உறுதிபடுத்த அந்த இளம்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப் பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.