கார்களைப் போல சாதாரணமாக எல்லோரும் பயன்படுத்தக்கூடிய சிறிய வகை விமானத்தை ஜெர்மனியைச் சேர்ந்த "லிலியம்' என்ற நிறுவனம் உருவாக்கி வருகிறது.
வீட்டு மின்சாரத்தில் மின்னேற்றம் செய்து கொண்டு, இரண்டு பேருடன் 500 கி.மீ. தொலைவு வரை பறந்து செல்லக்கூடிய இந்த விமானத்தை நின்ற இடத்திலிருந்து செங்குத்தாக மேலே கிளப்பவும், நினைத்த இடத்தில் செங்குத்தாக கீழே இறக்கவும் முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.
இதுகுறித்து "லிலியம்' நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டேனியல் வீகண்ட் கூறியதாவது:
சாமானிய மக்கள், அன்றாடத் தேவைக்காகப் பயன்படுத்தக் கூடிய விமானத்தை உருவாக்குவதே எங்களின் குறிக்கோள்.
நாங்கள் உருவாக்கும் விமானங்களுக்கு, விமான நிலையங்களின் சிக்கலான, செலவு பிடிக்கும் உட்கட்டமைப்பு தேவையாக இருக்காது.
வீட்டில் இருக்கும் சிறிய இடத்திலிருந்தே அந்த விமானத்தை பறக்கச் செய்யவும், தரையிறக்கச் செய்யவும் இயலும் வகையில் அந்த விமானத்தை வடிவமைத்து வருகிறோம்.
விமானத்தின் இரைச்சலைக் குறைக்க, சாதாரண விமான என்ஜின்களுக்குப் பதிலாக மின்சார என்ஜின்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.
இதனால் மக்கள் அதிகம் வசிக்கும் நகரப் பகுதிகளில் கூட இரைச்சல் மாசுபாடு இல்லாமல் ஏராளமானோர் இந்த விமானத்தைப் பயன்படுத்த முடியும்.
தொடுதிரை கட்டுப்பாட்டு அமைப்பு, தரையிறங்கும் போதும், கிளம்பும் போதும் நீண்டு மடங்கும் சக்கரங்கள், இறக்கை போல் உயர்ந்து இறங்கும் கதவுகள், ஏராளமான இட வசதி, வீட்டு மின்சாரத்திலும் கூட மின்னேற்றம் செய்யக்கூடிய மின்கலன் (பேட்டரி) ஆகிய அம்சங்களை எங்கள் விமானம் கொண்டிருக்கும்.
வரும் 2018-ஆம் ஆண்டு விற்பனைக்கு வரக்கூடிய அந்த விமானங்கள், ஒரு முறை மின்னேற்றம் செய்தால் 500 கி.மீ. வரை பறக்கும் திறன் கொண்டவையாக இருக்கும்.
ஆரம்பத்தில் மற்ற சிறிய வகை விமானங்களின் விலையிலேயே எங்களது விமானங்கள் விற்கப்பட்டாலும், அதன் இயக்கச் செலவுகள் மிகவும் குறைவானதாக இருக்கும்.
நீண்டகால நோக்கில், பெரும் பணக்காரர்கள்தான் விமானங்களை வாங்க வேண்டும் என்ற நிலையை மாற்றி, சாமானியர்களும் அதனை வாங்கிப் பயனுறலாம் என்ற நிலையை அடைவதே எங்களது இலக்கு என்றார் டேனியல்.
"லிலியம்' நிறுவனம் உருவாக்கி வரும் விமானத்தின் மாதிரி வடிவம் சோதிக்கப்பட்டு வருகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.