மகாத்மா காந்தியடிகளின் பேரன் கனுபாய் ராம்தாஸ் காந்தி தன் மனைவியுடன் வயதான காலத்தில் தங்க வீடு இன்றி அவதிப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மகாத்மா காந்தியடிகளின் 3-வது மகனான ராம்தாஸ் காந்தியின் 3 மகன்களில் ஒருவர் கனுபாய் காந்தி (வயது 87) இவர் தனது மனைவி ஷிவ லக்ஷ்மியுடன் டெல்லியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் இருந்து திரும்பிய அவர் குஜராத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் தற்போது டெல்லியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார்.
நம் தாய்நாட்டின் விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்தியின் பேரன், நிரந்தர வீடு கூட இல்லாமல் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் புகைப்படம் ஆங்கில நாளிதழ்களில் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து கனுபாயின் மனைவி கூறுகையில்,
மக்களுக்கு வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்த ஒரு தலைவனின் குடும்பம் வீடு இன்றி தவிப்பதாக வெளியான செய்தி பல்வேறு தரப்பினரிடம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்த பேரனான கனுபாய், மகாத்மா காந்தி கைத்தடியுடன் நடந்துச் செல்வதை தனது கேமராவில் பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.