Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 1, 2016

விமானத்தில் பணிப்பெண்ணிடம் தகராறு செய்ததாக மலையாள நடிகர் கைது மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் அதிகாரிகள் விடுவித்தனர்


அபுதாபி விமான நிலையத்தில் பணிப்பெண்ணிடம் தகராறு செய்ததாக மலையாள நடிகர் கைது செய்யப்பட்டார். பின்னர் தனது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் அதிகாரிகள் அவரை விடுவித்தனர்.

விமான பணிப்பெண்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து, ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபிக்கு நேற்று முன்தினம் எதிகாத் விமானம் புறப்பட்டு வந்தது. இந்த விமானத்தில் கேரளாவை சேர்ந்த மலையாள நடிகர் ஜினு ஜோசப் பயணம் செய்தார். விமான பயணத்தின்போது அவர் பணிப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததாக கூறப்பட்டது.

அபுதாபி விமான நிலையத்துக்கு இரவில் அந்த விமானம் வந்ததும் இந்த சம்பவம் குறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் அந்த பணிப்பெண் புகார் செய்தார்.

மலையாள நடிகர் கைது
அதன்பேரில் மலையாள நடிகர் ஜினு ஜோசப்பை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் அதிகாரிகளிடம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். தனது வருத்தத்தை கூறி மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் அவரை பாதுகாப்பு அதிகாரிகள் விடுவித்து, தொடர்ந்து பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கினர்.

விமானத்தில் நடந்த சம்பவம் பற்றி ஜினு ஜோசப் தனது முகநூல் பக்கத்தில், ‘‘விமானத்தில் எனது இருக்கையின் முன்புறம் இருந்த டி.வி.யை அணைக்கும்படி பணிப்பெண்ணிடம் கூறினேன். ஆனால் அவர் டி.வி.யை அணைக்காமல் ஒரு போர்வையை கொண்டுவந்து அதன்மேல் மூடினார். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று கேட்டபோது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் அபுதாபி விமான நிலைய அதிகாரிகளால் நான் கைது செய்யப்பட்டேன். நான் விடுதலையாக காரணமாக இருந்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.