ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை உடனடியாக நீக்கக்கோரி பிரதமருக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். அதில் ராஜன் மீது 6 குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
ரகுராம் ராஜன் மீது 6 குற்றச்சாட்டுக்களை அடுக்கும் சுப்பிரமணியன் சுவாமி: பதவி நீக்கும்படி மோடிக்கு மீண்டும் கடிதம்
ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் செயல்பாடுகளை பா.ஜ.க. மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி எம்.பி. விமர்சித்து வருகிறார். மேலும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மோடிக்கு கடந்த 17-ம் தேதி கடிதம் எழுதினார். இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் ராஜனின் செயல்பாடுகள் இருப்பதாகவும், அவர் மனதளவில் முழுமையான இந்தியர் அல்ல எனவும் சுவாமி விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் ராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி 6 விதமான குற்றச்சாட்டுகளுடன் இன்று மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
வட்டி விகிதத்தை உயர்த்தியது சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடியது என்று ரகுராம் ராஜன் மீது குற்றம் சுமத்திய சுப்ரமணியன் சுவாமி, வட்டி விகிதத்தை அதிக அளவில் உயர்த்துவதால், தவிர்க்க முடியாத விளைவுகள் ஏற்படும் என்று அறிந்தும் அவரது கொள்கை வேண்டும் என்றே இருந்ததாகவும், இது தேச விரோத நோக்கம் உடையதாகும் எனவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், மிகவும் ரகசியமான முக்கியத்துவம் வய்ந்த நிதித்தகவல்களை பாதுகாப்பு இல்லாத சிகாகோ பல்கலைக்கழக மின்னஞ்சல் மூலமாக அனுப்பியதாகவும், பாரதீய ஜனதா அரசை வெளிப்படையாக ரகுராம் ராஜன் இழிவு படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ள சுப்ரமணியன் சுவாமி, தன்னால் கூறப்பட்ட ஆறு வித குற்றச்சாட்டுகளுக்கும் உண்மையான முகாந்திரம் இருப்பதாகவும், தேசிய நலன்களுக்காக ரகுராம் ராஜனிடம் இருந்து பதவியை உடனடியாக பறிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ரகுராம் ராஜனை பதவி நீக்கம் செய்ய கோரி கடந்த 15 நாட்களுக்குள் பிரதமருக்கு சுப்ரமணியன் சுவாமி எழுதும் இரண்டாவது கடிதம் இதுவாகும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.