Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 24, 2016

சப்-இன்ஸ்பெக்டரின் ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.40 ஆயிரம் சுருட்டல்


சென்னை மாதவரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் தனபால் (வயது 52). இவர் நேற்று முன்தினம் இரவு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளை அண்ணாசதுக்கம் அருகே நிறுத்தி வைத்திருந்தார். நேற்று காலையில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளின் பெட்டி உடைக்கப்பட்டிருந்தது. அதற்குள் இருந்த வங்கி ஏ.டி.எம் கார்டு திருடப்பட்டு இருந்தது. ஏ.டி.எம் கார்டின் பின்பக்கம் அதன் ரகசிய குறியீட்டு எண்ணை எழுதி வைத்திருந்தார். அதை பயன்படுத்தி இவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் சுருட்டிவிட்டனர்.

ஏ.டி.எம். கார்டை திருடிய நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் ரூ.20 ஆயிரம் பணத்தையும், நேற்று அதிகாலையில் ரூ.20 ஆயிரம் பணத்தையும் ஆக மொத்தம் ரூ.40 ஆயிரம் பணத்தை இவரது வங்கி கணக்கிலிருந்து சுருட்டி விட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தனபால் அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.