அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பற்றி சிவகாசியில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘‘அவர்கள் கூறுவது எதையும் செய்யப்போவதில்லை’’ என்றார்.
தேர்தல் பிரசாரம்
சிவகாசியில் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீராஜா சொக்கருக்கு ஆதரவு கேட்டு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இன்னும் 10 நாட்கள் கழித்து சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வெடித்து நாம் வெற்றி விழாவை கொண்டாட உள்ளோம். பட்டாசு தொழிலை நம்பி இங்கு சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் சீன பட்டாசுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டன. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் சீன பட்டாசுகள் ஒழிக்கப்படும்.
சட்டசபையில் 110 விதியின் கீழ் பேசிய ஜெயலலிதா இந்த பகுதிக்கு செய்து கொடுக்கிறேன் என்று அவர் கூறிய ஒன்றையும் செய்து கொடுக்கவில்லை. தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை.
எதையும் செய்யப்போவதில்லை
அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையை சற்று நேரத்திற்கு முன்னர் வெளியிட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் கூறுவது எதையும் செய்யப்போவது இல்லை.
தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் மது இருக்காது. ஊழலற்ற ஆட்சி அமைப்போம். சிறுதொழில் பட்டியலில் இருந்த நீக்கப்பட்ட தீப்பெட்டி, பட்டாசு, மெழுகுவர்த்தி போன்றவற்றை மீண்டும் பட்டியலில் கொண்டுவர நடவடிக்கை எடுப்போம். தமிழகம் மீண்டும் தலைநிமிர தி.மு.க. ஆட்சி அமைக்க உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
துன்புறுத்துகிறது
முன்னதாக அவர் ராஜபாளையத்தில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.தங்கபாண்டியனை ஆதரித்து பேசியதாவது:-
சென்னையில் மதுக்கடையை அடைக்கக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அவர்கள் மீது இந்த அரசு காவல்துறையை ஏவி விட்டு தடியடி நடத்தி உள்ளது. மதுக்கடைகளுக்கு எதிராக போராடக்கூடிய பெண்களை கொச்சைப்படுத்தக்கூடிய வகையில் அவர்களை இந்த அரசு துன்புறுத்துகிறது.
ஆனால் ஜெயலலிதா, மதுவிலக்கினை படிப்படியாக கொண்டு வருவேன் என்று கூறி வருகிறார். வாட்ஸ்-அப்பில் பரவிய சிறுகுழந்தைகள் மதுவினை குடிக்கிற காட்சி இன்றும் நம் மனதை விட்டு நீங்கவில்லை.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு அமல்படுத்தப்படும். இந்த பகுதிக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். கருணாநிதியை பொறுத்தமட்டில் சொன்னதை மட்டும்தான் செய்வார். செய்வதை தான் சொல்வார் என்பது உண்மை.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.