Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 25, 2016

மராட்டியத்தில் வறண்ட 11 கிராமங்களுக்கு ஸ்பைஸ்ஜெட் தண்ணீர் வழங்குகிறது


மராட்டியத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட லத்தூர் மாவட்டத்தில் 11 கிராமங்களுக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நாள் ஒன்றிற்கு 71,500 லிட்டர் தண்ணீர் வழங்குவதாக அறிவித்து உள்ளது.

“மராட்டியம் வறட்சியுடன் போரடிவரும் நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் லத்தூரில் 11 கிராமங்களுக்கு உதவி அளிப்பதாக உத்தரவாதம் அளித்துஉள்ளது, ஸ்பைஸ்ஜெட் தன்னுடைய சேவையை தொடங்கி 11 ஆண்டுகள் ஆகியநிலையில் அதனை நினைவுகூறும் வகையில் 11 கிராமங்களுக்கு உதவிசெய்ய முன்வந்துஉள்ளது” என்று நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. லத்தூர் மாவட்டம் அவுசா தாலுகாவிற்கு உள்பட்ட 11 கிராமங்களுக்கு தினமும் 71,500 லிட்டர் தண்ணீரை தொண்டு நிறுவனத்துடன் இணைந்து வழங்கிறது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏற்பாடு செய்யும் டேங்கர் லாரிகள் சேவையை தொடங்கிவிட்டன, ஜூன் 23-ம் தேதிவரையில் தண்ணீர் வழங்குகிறது.

29 ஆயிரம் கிராமங்கள் வறட்சியினால் பாதிப்பு

 ‘‘மாநிலத்தில் 29 ஆயிரம் கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கப்படும். 2009–ம் ஆண்டைய வறட்சி மேலாண்மை திட்டத்தின்படி, நிவாரணம் வழங்கப்படும்’’ என்று மராட்டிய அரசு ஏற்கனவே ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளது.

மரத்வாடாவில் உள்ள அணைகளில் வெறும் ஒரு சதவித தண்ணீர் மட்டுமே மீதம் உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.