சென்னை ஐ.சி.எப்.பில் ராணுவ வீரர்களுக்காக 2 அடுக்கு சொகுசு ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
ரூ.250 கோடி மதிப்பில்
இந்திய ராணுவ வீரர்கள் பயன்பாட்டிற்காக ரூ.250 கோடி மதிப்பில் குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட 40 சொகுசு ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு முதல் சென்னை ஐ.சி.எப்.பில் நடந்து வருகிறது. இதுவரை 14 சொகுசு ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு ராணுவத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.
2 மாதங்களாக நடந்துவந்த 3 இரண்டடுக்கு ஏ.சி. ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி முடிவடைந்தது. அவற்றை இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி ஐ.சி.எப். வளாகத்தில் நேற்று காலை நடந்தது. விழாவையொட்டி அந்த 3 குளிர்சாதன சொகுசு ரெயில் பெட்டிகளும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
டெல்லி புறப்பட்டது
விழாவில் இந்திய ராணுவத்தின் தென் பிராந்திய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜக்பீர்சிங், ஐ.சி.எப். பொதுமேலாளர் அசோக் கே.அகர்வால் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து ரெயில் பெட்டிகள், என்ஜினுடன் இணைக்கப்பட்டு ரெயில் பாதை வழியாக இயக்கப்பட்டது.
இந்த 3 ரெயில் பெட்டிகளும் வில்லிவாக்கம் ரெயில் பணிமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து டெல்லிக்கு புறப்பட்டது.
ராணுவத்துக்கு அர்ப்பணிப்பு
இதுகுறித்து ஐ.சி.எப். பொது மேலாளர் அசோக் கே.அகர்வால் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘இந்திய ராணுவ வீரர்களுக்காக 40 குளிர்சாதன ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் திட்டத்தில் இதுவரை மொத்தம் 17 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் மாதத்துக்குள் இதர பெட்டிகளையும் தயாரித்து ராணுவத்துக்கு அர்ப்பணித்துவிடுவோம். ‘பேன்ட்ரி கார்’ (உணவு தயார் செய்யும் ரெயில் பெட்டி) தயாரிக்கும் பணி ஜூலை மாதத்துக்கு பின் நடைபெறும்’’ என்றார்.
இந்த சொகுசு ரெயில் பெட்டிகளில் ராணுவ வீரர்களுக்காக பல வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. ‘பயோ–டாய்லெட்’ என்ற நவீன கழிப்பறை, குளியலறை அமைக்கப்பட்டு உள்ளன. கொசு, பூச்சிகளை அகற்றும் ‘பிளையிங் கேட்சர்’ கருவிகளும் உள்ளன. துருப்பிடிக்காத இரும்பால் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.