ஐ.பி.எல். எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா அணி ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இதை தாங்கிக்கொள்ள முடியாத கொல்கத்தா அணியின் சீர்லீடர்கள் கதறி அழுதனர். அவர்களுக்கு ஷாருக்கான் நன்றி கூறியுள்ளார்.
கதறி அழுத சீர்லீடர் பெண்களுக்கு நன்றி கூறி பாராட்டிய ஷாருக்கான்
கடந்த 25-ந்தேதி ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்று நடைபெற்றது. இதில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியும், ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இதில் 22 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. ஐ.பி.எல். தொடரில் ஒவ்வொரு அணிக்கும் தனித்தனி சீர் லீடர் பெண்கள் உண்டு. இவர்கள் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சிக்சர்கள், பவுண்டரிகள் அடிக்கும்போது ஆடிக்கொண்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்கள்.
இப்படி சந்தோஷப்படுத்தும் இவர்களுக்கும் ஒரு இளகிய மனம் உள்ளது என்பது இந்த போட்டியின் முடிவில்தான் தெரிய வந்தது. கொல்கத்தா அணி தோல்வியடைந்ததும் அந்த அணியின் சீர்லீடர் பெண்கள் கதறி அழுதனர்.
இது அனைவரது மனதையும் உலுக்கியது. இந்த விஷயம் இத்தோடு நிற்காமல் பிசியாக சுற்றிக்கொண்டிருக்கும் அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கவனத்திற்குச் சென்றது. உடனே, அவர் தனது டுவிட்டரில் அந்த பெண்களுக்கு நன்றி கூறியதுடன், வாழ்த்தும் தெரிவித்தார்.
இதுகுறித்து ஷாருக்கான் தனது டுவிட்டரில் ‘‘நான் கொல்கத்தா அணி வீரர்களுக்கு மட்டும்தான் எப்போதும் வாழ்த்துக்கள் கூறியுள்ளேன். ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் சீர்லீடர் பெண்களுக்கு இதுவரை வாழ்த்துக்கள் கூறியது கிடையாது. அவர்களையும் நான் விரும்புகிறேன். அவர்களுக்கு என் நன்றி.
நாம் சரியாக செயல்படாத போது நமக்கு அதிக அளவில் கவலையாக இருக்கும் என்பதை என்னால் மறுக்க முடியாது. கொல்கத்தா அணி அடுத்த வருடமும் விளையாடும். சில நேரங்களில் நம்முடைய சிறந்த முயற்சி சரியான முடிவிற்கு போதுமானதாக இல்லாமல் போகலாம். ஐதராபாத் அணிக்கு வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.