இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக பணியாற்றிய ரவி சாஸ்திரியின் பதவி காலம் 20 ஓவர் உலக கோப்பையுடன் முடிவடைந்தது. அந்த அனுபவம் குறித்து ரவிசாஸ்திரி நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
இந்திய கிரிக்கெட்டுடன் ஒரு வீரராக, பிறகு ஒரு இயக்குனராக இணைந்து பணியாற்றிய இந்த 18 மாதங்கள் எனது வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத தருணங்களாகும். நாங்கள் ஒரு அணியாக சாதித்ததை நினைத்து பார்க்கும் போது இந்த காலக்கட்டம் மறக்க முடியாத அனுபவம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த காலக்கட்டத்தில் அணியின் செயல்பாடுகளை திரும்பி பாருங்கள். இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரில் வீழ்த்தினோம். ஆஸ்திரேலியாவை அவர்களது இடத்தில் ஏதாவது ஒரு வடிவிலான கிரிக்கெட்டில் முதல் முறையாக ‘ஒயிட்வாஷ்’ (20 ஓவர் போட்டியில் 3-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி) செய்தோம். இலங்கையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை கைப்பற்றினோம். தென்ஆப்பிரிக்காவை நமது மண்ணில் வைத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரில் வீழ்த்தினோம். இயக்குனராக பொறுப்பு ஏற்றதும், அணியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதை குறிக்கோளாக கொண்டேன். ஆனால் என்ன சாதிக்க முடியும் என்பதை நாம் அறிவது கடினம்.
இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்கள் அடித்து பிரமாதப்படுத்தினார். இதை சுலபமாக செய்து விட முடியாது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தற்போது விராட் கோலி அற்புதமாக விளையாடி ரன் குவித்து வருகிறார். இதிலும் 4 சதங்கள் அடித்திருப்பதுடன் ஆயிரம் ரன்களை நெருங்கி இருப்பது அபாரமான விஷயம் தான். ஆனால் ஆஸ்திரேலிய மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்கள் என்பதற்கு ஈடு இணை எதுவும் இல்லை. சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் 28 வயது முதல் 32 வயது வரை உச்சத்திற்கு செல்வார். அவர் இன்னமும் உச்சத்தை தொடவில்லை. அந்த நிலையை அடையும் போது மேலும் பல சாதனைகளை படைப்பார்.
இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பீர்களா? என்று ரவிசாஸ்திரியிடம் கேட்ட போது, ‘என்னால் ஐ.பி.எல் இறுதிப்போட்டியை பார்ப்பதற்கான சிறப்பு அனுமதி அட்டைக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்’ என்று தமாசாக பதில் அளித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.