சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி 24-ந் தேதி சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி, இத்திட்டத்தின் கீழ் புகைப்பட அடையாள அட்டை மற்றும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான கட்டணமில்லா பயணத்திற்கான டோக் கன்கள் வழங்கப்பட்டது.
தற்போது, ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் டோக்கன் பெற்றவர்கள் குடும்ப அட்டை நகல், புகைப்பட அடையாள அட்டை நகல்களை டோக்கன் பெற்ற மையங்களில் வழங்கி ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங் களுக்கான டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், புதிதாக இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மூத்த குடிமக்கள் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, குடும்ப அட்டையுடன் தாங்கள் வசிக்கும் இருப்பிடத்தின் அருகில் உள்ள மாநகர் போக்குவரத்து கிளை அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.