ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
பெண் கடத்தல் வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் இன்னாசிமுத்து மகன் ஆனந்த் (வயது 35). இவர் கடந்த 2010-ம் ஆண்டு கரூர் மாவட்டம் குளித்தலையில் தங்கி இருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது 18 வயது பூர்த்தி அடையாத ஒரு பெண்ணை காதலித்த ஆனந்த், அவரை கடத்தி திருமணம் செய்து கொண்டதாக குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் செய்தனர்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்
அப்போது குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வரலட்சுமி (52) இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இந்த புகார் தொடர்பாக வரலட்சுமி, ஆனந்தை அழைத்து விசாரணை நடத்தினார்.
புகார் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமானால் தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என வரலட்சுமி ஆனந்திடம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆனந்த் இதுபற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
3 ஆண்டு சிறை தண்டனை
கடந்த 22-12-2010 அன்று ஆனந்த், இன்ஸ்பெக்டர் வரலட்சுமியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்து கரூர் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி பார்த்தசாரதி விசாரித்து தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட வரலட்சுமிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.6 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.