ரூ.1366¼ கோடியில் சென்னை தியாகராயநகர் ‘ஸ்மார்ட் சிட்டி’ ஆகிறது. இதற்காக மாநகராட்சி ஆணையர் தலைமையில் விசேஷ நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.
‘ஸ்மார்ட் சிட்டி’
மத்திய அரசு ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்றப்பட உள்ள 100 நகரங்களில் முதல் கட்டமாக 20 நகரங்களை தேர்வு செய்துள்ளது. இதில் சென்னை மாநகரம் தேர்வாகி உள்ளது. சென்னை ‘ஸ்மார்ட் சிட்டி’யாக தரம் உயர்த்துவதன் ஒரு பகுதியாக முதல் கட்டமாக தியாகராயநகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விசேஷ நிறுவனம்
சென்னை மாநகரை ‘ஸ்மார்ட் சிட்டி’யாக ஆக்குவதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் வாரிய துறை இணைந்து சிறப்பு நோக்கத்துக்காக சென்னை ‘ஸ்மார்ட் சிட்டி’ எனும் விசேஷ நிறுவனம் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கூட்டாக இணைந்து ரூ.1,366¼ கோடி திட்ட மதிப்பில் இந்த முயற்சி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இந்த விசேஷ நிறுவனத்தின் தலைவராக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் பி.சந்திரமோகன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவரது தலைமையின் கீழ் செயல்பட நகர்ப்புற வளர்ச்சி-மேம்பாடு, நிதி, குடிநீர் வாரியம், உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், காவல், நகர்ப்புற வல்லுனர், குடிசை மாற்று வாரியம் உள்பட பல் துறை சார்ந்த பிரதிநிதிகள் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிறுவனம் ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் செயல்படும்.
மேலாண்மை திட்டம்
இத்திட்டத்தின் ஒரு அங்கமாக சென்னை தியாகராயநகர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இங்கு குடிநீர் வழங்கல், மின்சார உற்பத்தி, கழிவு-மழைநீர் வடிகால், துப்புரவு பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம், தகவல் தொழில்நுட்ப இணைப்பு மற்றும் மின்னணு முறை, பாதசாரிகள் நடப்பதற்கு சுமுகமான நடைபாதைகள், நுண்ணறிவு போக்குவரத்து திட்டம், திறந்தவெளி பசுமை இடங்கள் புதுப்பித்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.