Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 16, 2016

தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசனை


தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறிஉள்ளார்.

வாக்குப்பதிவு குறைவு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 232 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  கடலூர், சிதம்பரம், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், திருவாரூர் என பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழைக்கு இடையே பொதுமக்கள் குடையை பிடித்த வண்ணம் வாக்களிக்க செல்வதை காண முடிகிறது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் மின்சார சேவை பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. வாக்குச்சாவடிகளில் செல்போன் டார்ச் மற்றும் மெழுகுவர்த்திகள் மூலம் தேர்தல் நடைபெற்று வருகிறது.

நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வாக்குப்பதிவில் மந்தநிலை காணப்படுகிறது. இந்நிலையில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாக தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறிஊள்ளார்.

வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க கோரிக்கை

இந்நிலையில் மழை மற்றும் மின்சார சேவை பாதிப்பு காரணமாக தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னையிலும் மழை

சென்னையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, நுங்கம்பாக்கம், அசோக்நகர், ராயப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.