ரெயில்வே இணையதளத்தில் இருந்து ஒரு கோடி பேரின் அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்த தகவல்களை சி.டி.யாக்கி ஒரு சி.டி. ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரெயில்வே இணையதளம்
ரெயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியைப் பெறுவதற்காக இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.) இணைய தளத்தில் ஒரு கோடிப்பேர் தங்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் தங்களது பெயர், பிறந்ததேதி, இருப்பிடம், செல்போன் எண், பான் என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் உள்ளிட்ட தகவல்களை அளித்து தங்களுக்கு என்று ஒரு கணக்கை தொடங்கி இருக்கிறார்கள்.
இதன்மூலம் தினந்தோறும் ரெயில்களில் பயணம் செய்வதற்கு ஆன்லைன் வழியாக குறைந்தது 5 லட்சம் பேர் முன்பதிவு செய்கிறார்கள்.
தகவல்கள் திருட்டு
ஒரு கோடிப்பேர் இப்படி ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக தங்களது தனிப்பட்ட தகவல்களை அளித்து ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில், அதில் திருட்டுத்தனமாக புகுந்து இந்த தகவல்களை திருடி, அவற்றை சி.டி.க்களாக பதிவு செய்து தேவைப்படுவோருக்கு ஒரு சி.டி. 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த தகவல்களால் சம்பந்தப்பட்டவர்களின் உயிர்களுக்கு கூட அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளது.
அடையாளம் தெரிந்தது
அது மட்டுமின்றி, தற்போது டெலிமார்க்கெட் சந்தை வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், தனிநபர்கள் பற்றிய தகவல்களுக்கு கம்பெனிகள் முக்கியவத்துவம் அளிக்கின்றன. தனிநபர் தகவல்களுக்கு சந்தையில் நல்ல மதிப்பும் உள்ளது. அதை பயன்படுத்தி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் இருந்து தகவல்களை சட்டவிரோதமாக திருடி சி.டி.க்களாக பதிவு செய்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
இதுபற்றி ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகளை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, தனிப்பட்ட நபர்களின் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என்கிற தகவல்களை உறுதி செய்தனர். வாடிக்கையாளர்களை கவர விரும்புகிற நிறுவனங்களுக்கு இந்த தகவல்கள், புதையல் போன்றதாகும் என அவர்கள் கூறினர்.
இதற்கிடையே இப்படி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் இருந்து தகவல்கள் திருடியவர்களை மராட்டிய மாநில அரசு அடையாளம் கண்டுவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
உஷார்
இதுபற்றி ஐ.ஆர்.சி.டி.சி.யின் நிர்வாக இயக்குனர் ஏ.கே. மனோச்சாவிடம் கேள்வி எழுப்பியபோது அவர், “இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக நாங்கள் புகார் செய்யவில்லை. இருந்தபோதிலும், இது குறித்து விசாரணை நடத்துமாறு டெல்லி போலீஸ் துறையின் சைபர் பிரிவுக்கு கடிதம் எழுதி உள்ளேன்” என குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக ரெயில்வே துறையை உஷார்படுத்தி உள்ளதாக கூறிய மராட்டிய மாநில அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் (உள்துறை) கே.பி. பக்ஷி, கூடுதல் விவரங்களை தர மறுத்து விட்டார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.