மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்திக்க குடிமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வினாடி வினா (சரியான விடையை தேர்ந்தெடுத்தல்) தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றால் பிரதமரை நேரில் சந்திக்கவும், அவர் கையெழுத்து போட்ட சான்றிதழ் பெறவும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. www.mygov.in என்ற இணையதளத்துக்கு சென்று இந்த தேர்வில் மக்கள் பங்கேற்கலாம்.
ஆண்டுக்கு 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி என்ற சாதனையை எட்டுவதற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு எது? என்பது போன்ற 20 கேள்விகளுக்கு 5 நிமிடங்களுக்குள் ஆன்லைனிலேயே விடையளிக்க வேண்டும். அதிக வினாக்களுக்கு சரியான விடையளித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பிரதமருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படுவார்கள்.
கடந்த 25-ந்தேதி முதல் நடைமுறையில் இருக்கும் இந்த ஆன்லைன் தேர்வு வருகிற 5-ந்தேதியுடன் முடிகிறது. தேர்வில் பங்கேற்பவர்கள் மத்திய அரசின் தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களுக்கு மதிப்பீடு வழங்கவும் முடியும். இதுவரை சுமார் 1,772 பேர் இந்த தேர்வில் பங்கேற்றிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.