Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 9, 2016

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை பார்த்து பிரதமர் மோடியே திகைத்து போய் இருக்கிறார்: கருணாஸ் பேச்சு


திருமங்கலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் உதயகுமாரை ஆதரித்து தேவர் திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் விஜயன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்டு முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் நடிகர் கருணாஸ் பேசியதாவது:–

தி.மு.க.வினர் தண்ணீரில் தத்தளிக்கும் காப்பாற்றுபவரைக்கூட கொட்டும் தேள் போன்ற எண்ணம் கொண்டவர்கள். ஆனால் முதல்வர் ஜெயலலிதா தேள்கொட்டினாலும் அதனை காப்பாற்றும் எண்ணம் கொண்டவர்.

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையை பார்த்து இந்தியாவில் இருக்கக்கூடிய அத்தனை முதல்வர்களும் உறைந்து போயிருப்பதாகவும் ஏன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியே திகைத்துபோயிருக்கிறார் எனவும் அறிகிறேன்.

தி.மு.க.வினர் தங்களது குடும்பம் வாழ்வதற்காகவே நமக்கு நாமே என்ற திட்டத்தை தொடங்கியுள்ளனர்.இந்திய சுதந்திரத்திற்கு பிறகு குடும்ப ஆட்சி நடத்துபவர்கள் காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும்தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பேசிய நடிகர் சிங்கமுத்து தமிழர்களின் அத்தனை பிரச்சினைகளையும் தீர்க்ககூடியவர் ஜெயலலிதாதான் எனவும்.தமிழர்களுக்கு தீங்கு விளைவித்த காங்கிரஸ் கட்சிகாரர்களை கண்டால் பேசக்கூடாது அவர்களுடன் பேசினாலே தோசம்தான் எனவும் பேசினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ, மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர்ராஜா எம்.பி., மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா, சினிமா வசனகர்த்தா லியாகத் அலிகான், முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் அமைச்சர் உதயகுமாருக்கு ஆதரவாக இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பேசினார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.