Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 27, 2016

சிறிய உணவகத்தில் அமர்ந்து கூலாக நூடுல்ஸ் சாப்பிட்ட ஒபாமா


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது இடையிடையே குறும்புகள் செய்வது, வெள்ளை மாளிகை விருந்தின் போது குழந்தைகளுடன் விளையாடுவது, நகைச்சுவையாக பேசுவது என தன்னுடைய சுவாரசியமான நடவடிக்கைகளை செய்து அதனை இணையதளங்களிலும் வெளியிடுவார்.

இந்நிலையில் வியட்நாம் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஒபாமா, அந்நாட்டின் தலைநகரான ஹனாய்யில் உள்ள சிறிய உணவகத்திற்கு சென்று உணவருந்தினார்.

அமெரிக்காவின் பிரபல சமையல்காரரான அந்தோணி போர்டைனுடன் அமர்ந்து, பியர், சாதம், நூடுல்ஸ், சூப் போன்றவறை சாப்பிட்டுள்ளார்.

இந்த உணவகத்தில் அமர்ந்து ஒபாமா சாப்பிடுவதற்கு எவ்வித இட ஒதுக்கீடு மற்றும் அவரை வரவேற்பதற்காக நபர்களும் ஏற்பாடு செய்யவில்லை.

மிகவும் சாதாரணமாக உணவகத்திற்குள் சென்ற ஒபாமா, நீல நிற பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து, உணவருந்தும் காட்சியினை, அந்தோணி போர்டைன்  புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ஹனாய் நூடுல்ஸ் மிகவும் ருசியாக இருக்கும் என்பதால், அந்தோணி போர்டைன்  இந்த உணவகத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

ஒபாமா அருந்திய உணவிற்கு 6 அமெரிக்க டாலர் வசூலிக்கப்பட்டது.

ஒபாமாவின் ஆட்சிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், வியட்நாம் மற்றும் அமெரிக்க நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், வியட்நாம் மீதான ஆயுதத்தடையையும் ஒபாமா நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.