Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 30, 2016

ஜோலார்பேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொர்ணா எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டி எரிந்து சேதம் நாசவேலை காரணமா? அதிகாரிகள் விசாரணை


ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சொர்ணா எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் அந்த பெட்டி முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்துக்கு நாசவேலை காரணமா? என ரெயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எக்ஸ்பிரஸ் ரெயில்

பெங்களூரு– ஜோலார்பேட்டை இடையே இருமார்க்கத்திலும் சொர்ணா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்  பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் மாலை 5–20 மணிக்கு ஜோலார்பேட்டை நோக்கி புறப்பட்டது. இரவு 9–45 மணிக்கு அந்த ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தின் 4–வது பிளாட்பாரத்தை வந்தடைந்தது.

அங்கு பயணிகள் அனைவரும் இறங்கினர். அதன்பின்னர் அந்த ரெயில் மறுநாள் (நேற்று) பெங்களூருவுக்கு மீண்டும் புறப்படுவதற்கு முன்பாக யார்டு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2–15 மணிக்கு சொர்ணா எக்ஸ்பிரஸின் 5–வது பெட்டியானது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரெயில்வே ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்து விட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீ மேலும் பரவி விபரீதம் ஏற்படுவதை தடுப்பதற்காக ரெயில் பெட்டி மேல் செல்லும் மின்பாதையில் மின்சாரத்தை நிறுத்தினர்.

தீயில் எரிந்து நாசம்

அதற்குள் அங்கு வந்த திருப்பத்தூர் தீயணைப்பு படையினர் எரிந்து கொண்டிருந்த ரெயில் பெட்டி மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைப்பதற்காக போராடினர். சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அவர்கள் அணைத்தனர். இந்த விபத்தில் அந்த பெட்டியில் உள்ள இருக்கைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. அந்த பெட்டியானது எலும்புகூடு போல் காட்சியளித்தது.

தீவிபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்டர்தங்கராஜ், ஜோலார்பேட்டை ரெயில் நிலைய மேலாளர் ராஜா, ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வஜ்ஜிரவேலு மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

மின்கசிவு காரணமா?

இந்த தீ விபத்துக்கு மின்கசிவு காரணமா? அல்லது நாசவேலை காரணமாக இருக்குமா? என அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த ரெயிலின் எரிந்த 5–வது பெட்டியை மட்டும் தனியாக கழற்றிவிட்டு, மற்ற பெட்டிகளை என்ஜினுடன் ஊழியர்கள் இணைத்தனர். வழக்கமாக இந்த ரெயில் தினமும் அதிகாலை 4.25 மணிக்கு பெங்களூருவுக்கு புறப்பட்டு செல்லும். தீவிபத்து காரணமாக நேற்று ½ மணி நேரம் தாமதமாக அதாவது 5 மணி அளவில் அந்த ரெயில் பெங்களூரு நோக்கி புறப்பட்டது.

யார்டு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால், மற்ற ரெயில்கள் அனைத்தும் அந்தந்த வழித்தடங்களில் வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது. ரெயில் சேவை எதுவும் பாதிக்கப்படவில்லை.

இந்த சம்பவம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.