பீஜிங்,
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ரஹீல் ஷெரீப். இவர் 2 நாள் அரசு முறை பயணமாக சீனா சென்றார். பீஜிங் நகரில் சீன பிரதமர் லீ கெகியாங்கை அவர் நேற்று முன்தினம் (16-ந் தேதி) சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு பொருளாதாரம், ராணுவ உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்புக்கு பின்னர் பிரதமர் லீ கெகியாங் கூறும்போது, “46 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 600 கோடி) மதிப்பிலான சீன பாகிஸ்தான் பொருளாதார தடம், இரு தரப்புக்குமான மிக முக்கிய திட்டம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும், வளத்துக்குமான திட்டமாக அமையும்” என குறிப்பிட்டார்.
சீனாவின் மத்திய ராணுவ கமிஷனின் துணைத்தலைவர் பான் சாங்லாங்கையும் பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் சந்தித்து பேசினார். இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் ஆசிம் பஜ்வா கூறும்போது, “ராணுவ ஒத்துழைப்பு குறிப்பாக பயிற்சி பரிமாற்றங்கள், பாதுகாப்பு தொழில் நுட்பம், உளவுதகவல்கள் பகிர்வு, சீன பாகிஸ்தான் பொருளாதார தடத்தின் பாதுகாப்பு குறித்து சீன அதிகாரிகளுடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் பேச்சு நடத்தினார்” என குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.