நாடு முழுவதும் ஐந்து கோடிக்கும் அதிகமான வாகன ஓட்டிகள் போலி லைசென்ஸ் வைத்துள்ள நிலையில் இவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனையுடன் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நடைமுறையில் உள்ள 18 கோடி வாகன ஓட்டுனர் உரிமங்களில் சுமார் 5 கோடியே 40 லட்சம் (மூன்றில் ஒரு பங்கு) உரிமங்கள் போலியானவை என தெரியவந்துள்ளது. தற்போது, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, போலி லைசென்ஸ் வைத்துகொண்டு வாகனம் ஓட்டுவது போன்ற குற்றங்களுக்கு வெறும் ஐநூறு ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப்படுகிறது.
இந்த அபராதத் தொகையை பத்தாயிரம் ரூபாயாக உயர்த்துவதுடன் ஓராண்டு சிறை தண்டனையையும் சேர்த்து விதிப்பது தொடர்பாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக நம்பத்தகுந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல், 18 வயதுக்கு குறைவானவர்கள் லைசென்ஸ் பெறாமல் வாகனம் ஓட்டினால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும், அந்த வாகனத்தின் உரிமத்தை ரத்து செய்யவும் பரிசீலிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கான புதிய சட்ட முன்வரைவு விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.