சட்டமன்ற தி.மு.க. கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து எப்போது கிடைக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிக பலம்
நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக தி.மு.க. கட்சி அதிக இடங்களைப் பிடித்தது. 89 தொகுதிகளை வென்றுள்ள தி.மு.க., அதிக பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக நிற்கிறது.
தி.மு.க.வின் சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் அந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். சட்டமன்ற தி.மு.க. கட்சித் துணைத் தலைவராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். இதுகுறித்த கடிதத்தை சட்டசபை செயலகத்துக்கு தி.மு.க. அனுப்பியுள்ளது.
அரசாணை
இந்த நிலையில் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்தார். எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து அளிப்பது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது;-
ஜூன் 3-ந் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு நடைபெறவுள்ளது. சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டதும் அவரை அவை முன்னவரும், எதிர்க்கட்சி தலைவரும் சேர்ந்து, சபாநாயகர் இருக்கையில் அமர வைக்க வேண்டும்.
எனவே அதற்கு முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும். அதன் மூலம்தான் அவருக்கு அரசு கார், அரசு டிரைவர், தனிச் செயலாளர் போன்றவை அளிக்கப்பட வேண்டும்.
தனி அதிகாரம்
கடந்த ஆட்சியில், சபாநாயகர் தேர்தல் நடந்த அன்றுதான் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதே நடைமுறையே இப்போதும் பின்பற்றப்படலாம்.
சட்டசபையில் மற்ற உறுப்பினர்களுக்கான இடத்தை முடிவு செய்வது சபாநாயகரின் தனி அதிகாரத்துக்கு உட்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.