அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ‘பாட்சி சொம்மர் தொடக்கப்பள்ளி’யில் கணித ஆசிரியையாக பணியாற்றுபவர் ரேவதி பாலகிருஷ்ணன். சென்னையை சேர்ந்த இவர் கடந்த 6 ஆண்டுகளாக இந்த பள்ளியில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
கல்வித்துறையில் இவரது சிறந்த சேவையை பாராட்டி வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இவரை கவுரவித்தார். மேலும் இந்த ஆண்டுக்கான சிறந்த தொடக்கப்பள்ளி ஆசிரியைக்கான விருதுக்கும் டெக்சாஸ் மாகாணம் சார்பில் ரேவதி பாலகிருஷ்ணனின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
பள்ளிப்படிப்பை முடித்து சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற ரேவதி பாலகிருஷ்ணன், கணினி துறையில் 12 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பிறகு கல்வித்துறையில் ஆசிரியையாக சேர்ந்த இவர், அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் தொடக்கப்பள்ளி ஆசிரியையாக பணியாற்றி உள்ளார்.
ரேவதி தனது பணி குறித்து கூறுகையில், ‘கற்பித்தல் என்பது எனக்கு ஒரு பணி அல்ல. உண்மையில் அதுவே எனது விருப்பமும் ஆகும். மாணவர்களை எதிர்கால தலைவர்களாக உருவாக்குவது மிகவும் மகிழ்ச்சிகரமானது’ என்றார்.
தான் ஒரு இந்திய வம்சாவளி பெண் என்பதால், தனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த கவுரவம் அனைத்து இந்திய சமூகத்தினருக்கும் மகிழ்ச்சியும், பெருமையும் தரும் எனவும் ரேவதி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.